காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை மெழுகு அச்சு எடுத்ததாகப் புக...
திருமணம் என்ற கருத்தில் நம்பிக்கையில்லை..! மனம் திறந்த ஷ்ருதி ஹாசன்!
நடிகை ஷ்ருதி ஹாசன் சமீபத்திய நேர்காணலில் திருமணம் என்பது சாதாரண விஷயமில்லை அதில் தனக்குப் பயமாக இருப்பதாகக் கூறியுள்ளார்.
சூர்யாவின் ஏழாம் அறிவு படத்தில் அறிமுகமான நடிகை ஷ்ருதி ஹாசன் (39 வயது) தற்போது தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
கடைசியாக சலார் முதல் பாகத்தில் நடித்திருந்தார். தற்போது, கூலி, டிரெயின், ஜனநாயகன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
நடிகை ஷ்ருதி ஹாசன் தனது காதலன் சாந்தனு ஹஜாரிகாவை 2024-இல் பிரிந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் ஷ்ருதி ஹாசன் பேசியதாவது:
திருமணத்தில் நம்பிக்கையில்லை...
காதல், விசுவாசம் ஆகியவற்றில் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், திருமணம் என்ற கருத்தில் பயமிருக்கிறது.
நான் நானாகவே இருக்க, என் வாழ்க்கை முழுவதும் கடினமாக உழைத்திருக்கிறேன். தாளிக் கட்டுதல், திருமண ஒப்பந்தத்திற்கான சிறிய காகிதம் எல்லாம் என்னை அச்சுறுத்துவதாக இருக்கிறது.
திருமணத்துக்கான மதிப்பைக் காட்டும் அடையாளப்படுத்தும் விஷயங்களை மதித்தாலும் எனக்கு அதையெல்லாம் மதிப்புமிக்கதாக மாற்றும் ஆவணங்கள் தேவையில்லை.
நான் ஒருமுறை திருமணத்தின் விளிம்பிற்கே சென்றுவிட்டேன். ஆனால், அது எனக்கு சரியாக அமையவில்லை. ஒவ்வாதத்தன்மை மிகப்பெரிய விஷயமாக இருக்கிறது.
திருமணம் என்பது சாதாரணமில்லை...
திருமணம் என்பது இரண்டு நபர்களின் விஷயம் மட்டுமில்லை. அது குழந்தைகள், வருங்காலத்தைப் பகிர்ந்துக் கொள்ளுதல், வாழ்நாள் பொறுப்பைக் குறிப்பிடுகிறது.
எனக்கு எப்போதும் தாயாக வேண்டும் என்ற எண்ணமிருக்கிறது. ஆனால், கணவர் இன்றி குழந்தையை வளர்க்க விருப்பமில்லை. பொறுப்பான பெற்றோர்கள் குழந்தை வளர்ச்சிக்குத் தேவை.
சிங்கிள் மதர் (தனியாக வளர்க்கும் அம்மாக்கள்) மீது மிகுந்த மரியாதை இருக்கிறது. நான், தத்து எடுப்பது பற்றி வேண்டுமானால் சிந்திப்பேன். குழந்தைகள் எப்போதும் ஆச்சரியமூட்டுபவர்கள்.
தற்போதைக்கு நான் சிங்கிள்தான். என்னையே அதிகம் நேசிக்கிறேன். தனிமையை நிரப்ப காதலர்களைத் தேடுகிறார்கள். ஆனால், நான் தனியாக இருப்பதை விரும்ப நினைக்கிறேன். அதைத் தனிமை என்று முத்திரைக்குத்த விரும்பவில்லை என்றார்.