TVK : 'அதிகாரிகளுக்கு எதிராக முழக்கங்கள் கூடாது!' - தொண்டர்களுக்கு விஜய்யின் 12 ...
2026-ல் திமுக கூட்டணி வீட்டிற்கு அனுப்பப்படும்: நயினார் நாகேந்திரன்
2026-ல் திமுக கூட்டணி வீட்டிற்கு அனுப்பப்படும் என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் இன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசுகையில், தமிழகத்தில் ஒரு தவறு நடைபெறுகிறது என்றால் அதை சுட்டிக்காட்டுகின்ற கட்சியாக அதை தடுத்து நிறுத்தக்கூடிய கட்சியாக கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற அதிமுகவும் பாஜகவும் தான் என்பது மறுக்க முடியாத உண்மையாக இருந்து வருகிறது.
காரணம் திமுக தலைவர் ஓரணியின் தமிழகம் என்று வீடு வீடாகச் செல்கிறார். தோல்வி பயம் காரணமாக ரோட் ஷோ நடத்துகிறார். அமித்ஷாவை பார்த்தாலே திமுகவினர் பயப்படுகின்றனர். தமிழகத்துக்கு வருவதற்கு தில்லியில் இருந்து விமானம் ஏறுகின்றார் என்று செய்தி கேட்டாலேயே திமுகவினர் பயப்படுகின்றனர்.
வேங்கை வயல் பிரச்னை குறித்து திருமாவளவன் ஒரு வார்த்தை கூட வாய் திறக்கவில்லை. ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியில் இடது கம்யூனிஸ்ட் அவ்வப்போது குரல் எழுப்புகின்றனர். கூட்டணியில் இருந்து கொண்டு தவறு நடக்கும்போது தட்டி கேட்கிறார் என்றால் அது ஒரு நல்ல விஷயம். காங்கிரஸ் என்கின்ற ஒரு கட்சி தமிழகத்தில் இருக்கின்றதா இல்லையா என்று யாருக்குமே தெரியவில்லை.
2026ல் திமுக கூட்டணி வீட்டிற்கு அனுப்பப்படும். மதுரை எப்போதுமே பாஜகவினருக்கு ராசியான நகரம். மதுரையில் தான் அமித்ஷா அவர்கள் தலைமையில் மாநாடு நடைபெற்றது. அதேபோன்று முருக பக்தர்கள் மாநாடும் நடைபெற்றது. முருக பக்தர்கள் மாநாட்டில் பல லட்சம் பக்தர்களும் பொதுமக்களும் பங்கு பெற்றனர்.
புரொடக்ஷன் நம்பர் 1 பட பூஜை - புகைப்படங்கள்
மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற கூடிய ஊழலை தட்டிக் கேட்கும் வகையில் தான் இன்று பாஜக சார்பில் இந்த மதுரை மண்ணில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. மதுரை திமுகவிற்கு ராசி இல்லாத ஒரு இடம். இதற்கு முன்னர் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு அவர்கள் ஆட்சிக்கு வரவில்லை. மீனாட்சி அம்மனின் ஆட்சி தமிழகத்தில் நிச்சயம் மலரும்.
வீடுகளுக்குரிய வரி விதிப்பில் மாபெரும் ஊழல் செய்திருக்கிறார்கள். இந்த மதுரை மண் சாதாரண மண் கிடையாது நீதி கேட்டு போராடிய கண்ணகி வாழ்ந்த மண் இது. ஓரணியில் தமிழகம் என்கின்ற நிலையை மாற்றி கண்ணகி போராடிய இந்த மதுரை மண்ணிலிருந்து கூறுகிறேன் நிச்சயம் திமுகவே வீட்டிற்கு அனுப்புவோம் என்று சொல்லி தனது கண்டன உரையை நிறைவு செய்தார்.