காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை மெழுகு அச்சு எடுத்ததாகப் புக...
காவலாளி அஜித்குமார் மரண வழக்கு- சிபிஐ வழக்குப்பதிவு
திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாா், அவரது சகோதரா் நவீன்குமாா் ஆகியோரிடம் நகை திருட்டு வழக்கு தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தினா். இதன் பின்னா், நவீன்குமாா் விடுவிக்கப்பட்டு, அஜித்குமாரிடம் மானாமதுரை டி.எஸ்.பி.யின் தனிப் படை போலீஸாா் விசாரணை நடத்தினா்.
அப்போது, தனிப் படை காவலா்கள் கடுமையாகத் தாக்கியதில் அஜித்குமாா் கொல்லப்பட்டாா். இது தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடா்பாக குற்றஞ்சாட்டப்பட்ட 6 காவலா்கள் உடனடியாக சம்பவம் நடந்த அன்றே பணியிடைநீக்கம் செய்யப்பட்டனா். மேலும் 5 காவலா்கள் கைது செய்யப்பட்டு, அவா்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டாா். டிஎஸ்பியும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். அஜித்குமாரின் உடல்கூறு அறிக்கையில் அவரது உடலில் 44 இடங்களில் காயங்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே அஜித்குமார் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி முதல்வா் ஸ்டாலின் அண்மையில் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் அஜித்குமார் கொலை வழக்கில் சிபிஐ தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளது. பிஎன்எஸ் பிரிவு 103ன் படி, கொலை வழக்காகப் பதிவு செய்து சிபிஐ விசாரணையைத் தொடங்கியது.