வேலைவாய்ப்பு உருவாக்குவதில் கவனம் செலுத்தும் பாஜக அரசு: பிரதமர்!
பொது மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தனது அரசு கவனம் செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
தில்லியில் 51 ஆயிரம் இளைஞக்ளுக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி நியமன ஆணையை இன்று(ஜூலை 12) காணொலி வாயிலாகப் பிரதமர் மோடி வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது,
உங்களுடைய புதிய பயணத்திற்கு எனது வாழ்த்துகள். மக்களுக்குச் சேவை செய்வதை நோக்கமாகக் கொள்ள வேண்டும்.
தனது அரசு இதுவரை ஏழைகளுக்கு 4 கோடிக்கும் மேற்பட்ட வீடுகள், 10 கோடிக்கும் மேற்பட்டோர்களுக்கு புதிய எல்பிஜி இணைப்புகள், சூரிய சக்தி திட்டம் எனத் தனது அரசின் நலத்திட்டங்கள் லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.
கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வருமான ஆதாரங்கள் இல்லையென்றால் அது நடந்திருக்காது.
உற்பத்தியை அதிகரிப்பதில் தனது அரசு கவனம் செலுத்தி வருகிறது. 11 ஆண்டுகளில் மின்னணு உற்பத்தி ஐந்து மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளதாகவும், மொபைல் உற்பத்தி அலகுகள் இரண்டு முதல் நான்கு மடங்கு வரை கிட்டத்தட்ட 300 ஆக உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு பாதுகாப்பு உற்பத்தி பெருமையுடன் விவாதிக்கப்படுகிறது. பாதுகாப்பு உற்பத்தியின் மதிப்பு ரூ. 1.25 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.
தனது சமீபத்திய ஐந்து நாடுகளின் சுற்றுப்பயணத்தைப் பற்றிப் பேசிய அவர், முழு உலகமும் இப்போது இந்தியாவின் மக்கள்தொகை மற்றும் ஜனநாயகத்தின் வலிமையை அங்கீகரித்துள்ளது. இந்திய இளைஞர்களின் வலிமை அதன் மிகப்பெரிய மூலதனம், நாட்டின் பிரகாசமான எதிர்காலத்திற்கான உத்தரவாதம்.
ரோஜ்கர் மேளாவின் ஒரு பகுதியாக நியமனக் கடிதங்கள் விநியோகிக்கப்பட்டன. இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல், வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு பகுதியாக ரோஜ்கர் மேளா திட்டம் உள்ளது என்று அவர் கூறினார்.