செய்திகள் :

திருச்சி : தலைக்கேறிய மது போதை; பள்ளியில் விழுந்து கிடந்த ஆசிரியர் - சஸ்பெண்ட் செய்த அதிகாரி!

post image

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள வையமலை பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஓன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 20 மாணவ - மாணவிகள் படித்து வரும் நிலையில், ஆவாரம்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் (45) என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், பள்ளியில் இருந்த ஆசிரியர் ஆரோக்கிராஜ் மித மிஞ்சிய மது போதையில் பள்ளியில் தகராறில் ஈடுபட்டத்துடன், பள்ளியிலேயே படுத்துக் கிடப்பது மற்றும் அவருக்கு மக்கள் தண்ணீர் கொடுக்கும் காட்சிகள் சமூக வலை தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை வேதனைக்கு ஆளாக்கியது. பின்னர், இதுபற்றி தகவல் அறிந்த வட்டார கல்வி அலுவலர் லதா, மணப்பாறை டி.எஸ்.பி கதிரவன், மணப்பாறை மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா மற்றும் அதிகாரிகள் நேரில் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணை

மேலும், சம்மந்தப்பட்ட ஆசிரியரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவர் தலைக்கேறிய மது போதையில் இருப்பது உறுதியாகி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், சம்மந்தப்பட்ட ஆசிரியரை தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் தலைக்கேறிய மதுபோதையில் பள்ளி அறையில் விழுந்து கிடந்த சம்பவம், பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஊட்டி: தாம்பத்யத்திற்கு மறுத்த மனைவி, பெற்ற மகளையே அழைத்த கொடூர தந்தை - அதிர்ச்சி பின்னணி

புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு தம்பதியர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரி மாவட்டத்தில் குடியேறியுள்ளனர். 2 மகன்கள் மற்றும் 2 மகள் உள்ள நிலையில், கணவன் கட்டட வேலையும் மனைவி காட்டேஜ் ஒன்றிலும் பணியாற்றி... மேலும் பார்க்க

சிவகாசி: வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு; பறிமுதல் செய்து காவல்துறை நடவடிக்கை

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுபாட்டுத்துறை, மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் என 1080 பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்த தொழிலை சார்ந்து நேரடியாகவும்,... மேலும் பார்க்க

முடி வெட்டச் சொன்ன ஆசிரியர்; கத்தியால் குத்திக் கொன்ற 12-ம் வகுப்பு மாணவர்கள்! - என்ன நடந்தது?

ஹரியானா மாநிலம் ஹிசாரில் உள்ள பாஸ் பாட்ஷாபூர் கிராமத்தில் கர்தார் நினைவு சீனியர் செகண்டரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் முதல்வராக ஜக்பீர் சிங் (50) பணியாற்றி வந்தார். நேற்று காலை பள்ளியி... மேலும் பார்க்க

ரீல்ஸ் வெளியிட்ட டென்னிஸ் வீராங்கனை; கோபத்தில் சுட்டுக்கொலை செய்த தந்தை.. ஹரியானாவில் அதிர்ச்சி

ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியை சேர்ந்தவர் ராதிகா யாதவ்(25). டென்னிஸ் வீராங்கனையானை ராதிகா மாநில அளவில் விளையாடி இருக்கிறார். இரட்டையர் பிரிவில் ராதிகா 113-வது இடத்தில் இருக்கிறார். ராதிகாவிற்கும் ... மேலும் பார்க்க

கோவை: பெண்ணுடன் பகை; தவறாக பேசி வந்த இளைஞர் - 12 இடங்களில் வெட்டி கொலை செய்யப்பட்ட நபர்

கோவை காரமடை பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் (வயது 23). பால் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு பெற்றோர் மற்றும் ஒரு சகோதரி உள்ளனர். வீடு சிறியதாக இருப்பதால் சஞ்சய் அருகில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளா... மேலும் பார்க்க

``என் பேரன் என்னைப் பாலியல் வன்கொடுமை செய்தான்" - காவல்நிலையத்தில் மூதாட்டி புகார்; பின்னணி என்ன?

ஹிமாச்சல் பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் ரோஹ்ரு நகரில் 65 வயது மூதாட்டி வசித்து வந்தார். கணவரை இழந்த அவர், தனியாக வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சிம்லா காவல்நிலையத்தில் அந்த மூதாட்ட... மேலும் பார்க்க