செய்திகள் :

``என் பேரன் என்னைப் பாலியல் வன்கொடுமை செய்தான்" - காவல்நிலையத்தில் மூதாட்டி புகார்; பின்னணி என்ன?

post image

ஹிமாச்சல் பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் ரோஹ்ரு நகரில் 65 வயது மூதாட்டி வசித்து வந்தார். கணவரை இழந்த அவர், தனியாக வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சிம்லா காவல்நிலையத்தில் அந்த மூதாட்டி புகார் அளித்திருக்கிறார். அந்தப் புகாரில், ``ஜூலை 3-ம் தேதி மதியம் என் வீட்டுக்கு வந்த என் பேரன் என்னைப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டான்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

முதியப் பெண்
முதியப் பெண்

இந்தப் புகார் தொடர்பாக பிஎன்எஸ் பிரிவுகள் 64(2) (பாலியல் வன்கொடுமை), 332(பி) 351(3) (குற்றவியல் மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட 25 வயது நபரை காவல்துறை கைது செய்திருக்கிறது.

அதே போல மகாராஷ்டிரா மாநில காவல்நிலையத்தில் பதிவான ஒரு புகாரில், ``என் முதல் கணவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அதன்பிறகு ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்துகொண்டேன்.

கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராமில் அஷ்ரப் சவுத்ரி என்பவர் அறிமுகமானார். அவருடன் நட்பாகப் பழகிவந்தோம். இந்த நிலையில், அஷ்ரப் சவுத்ரி என் கணவரை விவாகரத்து செய்ய வேண்டும் எனக் கட்டாயப்படுத்தினார்.

பெண்
பெண்

இதற்கிடையில், என்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பலமுறை பாலியல் உறவிலிருந்திருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறது.

இந்தப் புகாரின் அடிப்படையில், காவல்துறை துபாய்க்குத் தப்பிச் செல்ல முயன்ற அஷ்ரப் சவுத்ரியைக் கைது செய்திருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

சண்டையை விலக்க வந்தவரைத் தாக்க முயன்ற பெண்; குழந்தையின் உயிரைப் பறித்த திரிசூலம்; என்ன நடந்தது?

குடும்பச் சண்டையில் பரிதாபமாக ஒரு வயதுக் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.மகாராஷ்டிரா மாநிலம் அகமத்நகர் அருகில் உள்ள கெட்காவ் என்ற இடத்தைச் சேர்ந்தவர் சச்சின். சச்சினுக்கும், அவரது மனைவி பல்லவிக்கும் இடை... மேலும் பார்க்க

ஊட்டி: தாம்பத்யத்திற்கு மறுத்த மனைவி, பெற்ற மகளையே அழைத்த கொடூர தந்தை - அதிர்ச்சி பின்னணி

புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு தம்பதியர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரி மாவட்டத்தில் குடியேறியுள்ளனர். 2 மகன்கள் மற்றும் 2 மகள் உள்ள நிலையில், கணவன் கட்டட வேலையும் மனைவி காட்டேஜ் ஒன்றிலும் பணியாற்றி... மேலும் பார்க்க

சிவகாசி: வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு; பறிமுதல் செய்து காவல்துறை நடவடிக்கை

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுபாட்டுத்துறை, மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் என 1080 பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்த தொழிலை சார்ந்து நேரடியாகவும்,... மேலும் பார்க்க

முடி வெட்டச் சொன்ன ஆசிரியர்; கத்தியால் குத்திக் கொன்ற 12-ம் வகுப்பு மாணவர்கள்! - என்ன நடந்தது?

ஹரியானா மாநிலம் ஹிசாரில் உள்ள பாஸ் பாட்ஷாபூர் கிராமத்தில் கர்தார் நினைவு சீனியர் செகண்டரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் முதல்வராக ஜக்பீர் சிங் (50) பணியாற்றி வந்தார். நேற்று காலை பள்ளியி... மேலும் பார்க்க

ரீல்ஸ் வெளியிட்ட டென்னிஸ் வீராங்கனை; கோபத்தில் சுட்டுக்கொலை செய்த தந்தை.. ஹரியானாவில் அதிர்ச்சி

ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியை சேர்ந்தவர் ராதிகா யாதவ்(25). டென்னிஸ் வீராங்கனையானை ராதிகா மாநில அளவில் விளையாடி இருக்கிறார். இரட்டையர் பிரிவில் ராதிகா 113-வது இடத்தில் இருக்கிறார். ராதிகாவிற்கும் ... மேலும் பார்க்க

கோவை: பெண்ணுடன் பகை; தவறாக பேசி வந்த இளைஞர் - 12 இடங்களில் வெட்டி கொலை செய்யப்பட்ட நபர்

கோவை காரமடை பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் (வயது 23). பால் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு பெற்றோர் மற்றும் ஒரு சகோதரி உள்ளனர். வீடு சிறியதாக இருப்பதால் சஞ்சய் அருகில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளா... மேலும் பார்க்க