செய்திகள் :

`கோடிக்கணக்கில் ஊழல் செய்பவர்களையெல்லாம் விட்டுவிடுகிறார்கள்' - டாக்டர் கிருஷ்ணசாமி

post image

காவல் நிலைய மரணங்களுக்கு நீதி கேட்டு புதிய தமிழகம் கட்சியினர் மதுரையில் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் ஆர்பாட்டம் நடத்தினர்.

ஆர்பாட்டம்

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், சங்கரன்கோவிலில் முருகன், பாளையங்கோட்டை சிறையில் முத்துமனோ உள்ளிட்ட அனைத்து காவல் நிலைய மரணங்களுக்கும் நீதி கேட்டும், விசாரணையின் போது உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்ற வலியுறுத்தியும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்பாட்டத்தில், மடப்புரம் அஜித்குமாரின் மரணத்துக்கு நீதி கேட்டும், தமிழக அரசு, காவல் துறையைக் கண்டித்து பதாகைகள் ஏந்தி கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

பின்பு டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசும்போது, "சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவலாளி அஜித்குமார் காவல்துறையினரின் சித்திரவதையால் கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் கண்டிக்க தக்கது. கோடிக்கணக்கில் ஊழல் செய்பவர்களை எல்லாம் விட்டுவிட்டு சிறிய அளவில் திருடும் திருடர்கள், ஏதும் அறியாத அஜித்குமார் போன்றவர்களை காவலர்கள் அடித்து துன்புறுத்தி வருகின்றனர்.

டாக்டர் கிருஷ்ணசாமி

அஜித்குமாரின் தம்பி நவீனுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணி வழங்க வேண்டும். அப்போதுதான் தகுதிக்கேற்ப பணி உயர்வு பெறுவார். அதை விட்டுவிட்டு அரசின் சார்பு நிறுவனமான ஆவினில் பணி வழங்கியது ஏற்புடையது அல்ல, இந்த சம்பவத்தில் நீதிமன்றம் உரிய நீதி வழங்கிட வேண்டும்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

``75 வயதாகிவிட்டால் ஒதுங்கியிருக்க வேண்டும்..." - மோகன் பகவத் பேச்சுக்கு காங்கிரஸின் ரியாக்‌ஷன்?

கடந்த புதன்கிழமை நாக்பூரில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, ``உங்களுக்கு 75 வயது ஆகிவிட்டது என்றால், நீங்கள் உங்கள் பொறுப்பில... மேலும் பார்க்க

மதிமுக: ``8 இடங்களிலாவது வெற்றிபெற வேண்டும் என்றால்..." - தொகுதிப் பங்கீடு குறித்து துரை வைகோ!

சட்டமன்றத் தேர்தலில் மதிமுக தொகுதிப் பங்கீடு குறித்தும், அதிமுக வைகைச்செல்வன் வைகோவை `வைகோ பொய்கோ' என விமர்சித்தது உள்ளிட்டப் பல்வேறு கேள்விகளுக்கு திருச்சி எம்.பி-யும் ம.தி.மு.க முதன்மைச் செயலாளருமான... மேலும் பார்க்க

`குப்பை டெண்டரில் கைமாறிய லஞ்சத்தால் புதுச்சேரியில் துர்நாற்றம் வீசுகிறது’ - அரசை சாடும் திமுக

புதுச்சேரி அரசுக்கு அபராதம் விதித்த பசுமை தீர்ப்பாயம் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சித் தலைவரும், தி.மு.க அமைப்பாளருமான சிவா, ``புதுச்சேரி முழுவதும் `ஸ்வச்தா கார்ப்பரேஷன்’ மூலம் குப்... மேலும் பார்க்க

'ஆர்ப்பாட்டம்... வார் ரூம்... மாநாடு' - வேகமெடுக்கும் விஜய்; அலர்ட் மோடில் உளவுத்துறை!

'பனையூர் அப்டேட்ஸ்!'திமுகவும் அதிமுகவும் தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்ட நிலையில், அடி மேல் அடி வைத்து நகர்ந்து கொண்டிருந்த விஜய்யின் தவெகவும் அரசியல் சூட்டை உணர்ந்து இப்போது கொஞ்சம் வேகமெடுக்க ஆரம்பித்த... மேலும் பார்க்க