செய்திகள் :

மதிமுக: ``8 இடங்களிலாவது வெற்றிபெற வேண்டும் என்றால்..." - தொகுதிப் பங்கீடு குறித்து துரை வைகோ!

post image

சட்டமன்றத் தேர்தலில் மதிமுக தொகுதிப் பங்கீடு குறித்தும், அதிமுக வைகைச்செல்வன் வைகோவை `வைகோ பொய்கோ' என விமர்சித்தது உள்ளிட்டப் பல்வேறு கேள்விகளுக்கு திருச்சி எம்.பி-யும் ம.தி.மு.க முதன்மைச் செயலாளருமான துரை வைகோ பதிலளித்திருக்கிறார். திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், ``தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக விளங்கும் ம.தி.மு.க சார்பில் செப்டம்பரில் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு திருச்சியில் நடைபெறும்.

வைகோ - மல்லை சத்யா

எங்கள் கட்சியின் தலைவர் வைகோ குறித்து வைகைச்செல்வன் பேசியது அவருடைய தனிப்பட்ட கருத்து. அரசியல் இயக்கங்களில் தவறுகள் நடப்பது இயல்புதான். அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்தது தவறு என வைகோ வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். அதற்காக அ.தி.மு.க தீண்ட கூடாத கட்சி எனப் பொருளல்ல. எம்.ஜி.ஆரையோ ஜெயலலிதாவையோ அவர் இழிவுபடுத்தி எந்தக் கருத்தும் கூறியதில்லை. மல்லை சத்யா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சியின் தலைமை தான் முடிவு செய்யும்.

ம.தி.மு.க-விலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நீக்கப்பட்டவர்தான் தி.மு.க-வில் சேர்த்துள்ளார். இன்னும் நீக்கப்பட்ட சிலர் வேறு வேறு கட்சிகளில் இணையலாம். ம.தி.மு.க-வில் இன்னும் சிலர் ஒதுங்கி இருக்கிறார்கள். தலைமைக்கு துரோகம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களும் வேறு சில இயக்கங்களில் இணையலாம். அது அவர்களின் உரிமை. கட்சிக்கு துரோகம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தலைவர்தான் முடிவெடுப்பார்.

துரை வைகோ

ம.தி.மு.க செயல் வீரர்கள் கூட்டத்தில் காலி நாற்காலிகளை படம் எடுத்த பத்திரிகையாளர்களை அடிக்க வேண்டும் என வைகோ கூறவில்லை. வைகோ கோபப்படுவதால் அவர் இழந்தது தான் அதிகம். கோபப்பட்டாலும் அவர் நல்ல மனிதர். பொடா சட்டம் வந்த பொழுது வைகோ அதை ஏற்றுக்கொள்ளக் கூடாது என நாடாளுமன்றத்தில் பேசினார். பொடாவில் பத்திரிகை துறையினரையும் கைது செய்யலாம் என இருந்தது, அதை மட்டுமாவது நீக்க வேண்டும் என பேசியவர் வைகோ.

பத்திரிகையாளர்களுக்காக முதலில் நிற்கும் நபர் வைகோ. கூட்டணியில் 12 இடங்கள் வேண்டும் என ம.தி.மு.க எங்கும் கேட்கவில்லை. எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து கூட்டணி தலைமையுடன் பேசி தேர்தல் நேரத்தில் தலைவர் முடிவெடுப்பார். ஆனால், அங்கிகாரம் பெற்றக் கட்சியான மதிமுக 8 இடங்களிலாவது வெற்றிபெற வேண்டும் என்றால், குறைந்தது 12 இடங்களிலாவது போட்டியிட வேண்டும்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

``75 வயதாகிவிட்டால் ஒதுங்கியிருக்க வேண்டும்..." - மோகன் பகவத் பேச்சுக்கு காங்கிரஸின் ரியாக்‌ஷன்?

கடந்த புதன்கிழமை நாக்பூரில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, ``உங்களுக்கு 75 வயது ஆகிவிட்டது என்றால், நீங்கள் உங்கள் பொறுப்பில... மேலும் பார்க்க

`குப்பை டெண்டரில் கைமாறிய லஞ்சத்தால் புதுச்சேரியில் துர்நாற்றம் வீசுகிறது’ - அரசை சாடும் திமுக

புதுச்சேரி அரசுக்கு அபராதம் விதித்த பசுமை தீர்ப்பாயம் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சித் தலைவரும், தி.மு.க அமைப்பாளருமான சிவா, ``புதுச்சேரி முழுவதும் `ஸ்வச்தா கார்ப்பரேஷன்’ மூலம் குப்... மேலும் பார்க்க

'ஆர்ப்பாட்டம்... வார் ரூம்... மாநாடு' - வேகமெடுக்கும் விஜய்; அலர்ட் மோடில் உளவுத்துறை!

'பனையூர் அப்டேட்ஸ்!'திமுகவும் அதிமுகவும் தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்ட நிலையில், அடி மேல் அடி வைத்து நகர்ந்து கொண்டிருந்த விஜய்யின் தவெகவும் அரசியல் சூட்டை உணர்ந்து இப்போது கொஞ்சம் வேகமெடுக்க ஆரம்பித்த... மேலும் பார்க்க

`அறநிலையத்துறை கல்லூரி தொடங்கக் கூடாது என நான் கூறவில்லை’ - எடப்பாடி பழனிசாமி ஓப்பன் டாக்

2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, `மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தொகுதி வாரியாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று இர... மேலும் பார்க்க