பொது வேலைநிறுத்தத்தால் மேற்கு வங்கம், கேரளத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
கூலி இரண்டாவது பாடல் அறிவிப்பு!
கூலி திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கூலி திரைப்படம் இந்தியளவில் பெரிய வணிக வெற்றியைப் பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளதால் ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தங்கக் கடத்தலை முதன்மைக் கதையாக வைத்து இப்படம் முழுநீள ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. முக்கியமான சண்டைக் காட்சியொன்று தாய்லாந்திலும் படமாக்கப்பட்டுள்ளது.
கூலி திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா ஜூலை 27 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், அனிருத் இசையமைப்பில் உருவான இப்படத்தின் இரண்டாவது பாடல் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
The Monica fever is about to begin! #Coolie Second Single #Monica featuring @hegdepooja releasing on July 11, 6 PM ❤️#Coolie worldwide from August 14th @rajinikanth@Dir_Lokesh@anirudhofficial@iamnagarjuna@nimmaupendra#SathyaRaj#SoubinShahir@shrutihaasan@anbariv… pic.twitter.com/G8YYHx1jLI
— Sun Pictures (@sunpictures) July 9, 2025
அதன்படி, நடிகை பூஜா ஹெக்டே நடனமாடிய ’மோனிகா’ என்கிற பாடலை ஜூலை 11 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: மாரீசன் - ஃபாஃபா பாடல்!