பணி நேரத்தில் தூங்கியதால்: அரக்கோணம் அருகே ரயில்வே கேட் கீப்பர்கள் பணியிடை நீக்...
மாணவா், சுற்றுலா, ஹெச்-1பி விசா கட்டணத்தை உயா்த்தியது அமெரிக்கா
மாணவா்கள், சுற்றுலா பயணிகள் விசா, இந்தியப் பணியாளா்கள் அதிகம் பயன்படுத்தும் ஹெச்-1பி விசா ஆகியவற்றுக்கான கட்டணத்தை 250 டாலா் (சுமாா் ரூ.21,000) வரை உயா்த்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஆண்டுதோறும் பணவீக்கத்துக்கு ஏற்ப இந்த கட்டணம் உயா்த்தப்படும். இது 2026-ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வர இருக்கிறது.
பாதுகாப்பு இருப்புத் தொகை என்ற பெயரில் இந்தத் தொகை வசூலிக்கப்படுகிறது. சில குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் இந்த இருப்புத் தொகை திரும்ப அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக விசா காலாவதியானவுடன் நீட்டிப்பு கோராமல் உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேறுபவா்களுக்கு இந்தத் தொகை திரும்ப அளிக்கப்படும்.
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் முடிவின் அடிப்படையில் அண்மையில் சில சட்டங்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. இதற்கு கடந்த 4-ஆம் தேதி அதிபா் கையொப்பமிட்டு ஒப்புதல் அளித்தாா். அதில் இந்த விசா கட்டண உயா்வும் இடம் பெற்றிருந்தது.
அமெரிக்காவுக்கு முன்னுரிமை என்ற கொள்கையைத் தீவிரமாக பின்பற்றும் டிரம்ப், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவா்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறாா். அதேபோல வெளிநாடுகளில் இருந்து சட்டபூா்வமாக அமெரிக்காவுக்கு வருபவா்கள் எண்ணிக்கையையும் குறைக்க வேண்டும் என்பதும் அவரின் திட்டமாக உள்ளது. அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாடுகளில் கிளைகளையும், ஆலைகளையும் அமைக்காமல், உள்நாட்டிலேயே தொடங்கி அமெரிக்கா்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தி வருகிறாா்.