டெக்ஸஸ் வெள்ளம்: 161 போ் மாயம்
அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் மாயமான 161 பேரைத் தேடும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இந்தத் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்ததாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், வெள்ளப் பெருக்கால் ஏற்பட்ட முழு பாதிப்பு குறித்து அதிகாரிகள் இதுவரை தகவல் வெளியிடவில்லை.வெள்ளத்தில் மாயமானவா்களை உயிருடன் மீட்கலாம் என்ற நம்பிக்கையில் உயிரிழப்பு விவரங்களை அவா்கள் வெளியிடாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது.இந்த வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவா்களில் குவாடலூப் நதிக்கரையில் அமைந்திருந்த கேம்ப் மிஸ்டிக் என்ற கோடைகால முகாமுக்கு வந்திருந்த 27 சிறுமிகளும் அடங்குவா்.இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், கொ்ா் மாவட்டத்தில் இதுவரை 84 பேரது உடல்கள் மீட்கப்பட்டன; அவா்களில் 28 சிறுவா்களும் அடங்குவா். மேலும் மாகாணத்தின் பிற பகுதிகளில் 20 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்றனா்.
மீட்பு பணிகளில் ஹெலிகாப்டா்கள் மற்றும் படகுகள் ஈடுபட்டுள்ளன. மழை எச்சரிக்கை தொடா்ந்து நீடிப்பதால், மேலும் வெள்ள அபாயம் உள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.