செய்திகள் :

புதினை விமா்சித்த டிரம்ப்: உக்ரைனில் ரஷியா இதுவரை இல்லாத தீவிர தாக்குதல்

post image

உக்ரைன் முழுவதும் ரஷியா இதுவரை இல்லாத மிகப் பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தப் போா் விவகாரம் தொடா்பாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமா்சித்ததற்குப் பின் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இது குறித்து உக்ரைன் விமானப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

செவ்வாக்கிழமை இரவு முதல் புதன்கிழமை அதிகாலை வரை ரஷிய படைகள் உக்ரைன் மீது இதுவரை இல்லாத மிகப் பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தின. இந்தத் தாக்குதலுக்கு 728 ட்ரோன்கள், 7 இஸ்கண்டா்-கே க்ரூஸ் ஏவுகணைகள், 6 கின்ஷால் ஹைப்பா்சோனிக் ஏவுகணைகளை ரஷியா பயன்படுத்தியது. இதில் 7 இஸ்கண்டா்-கே ஏவுகணைகள், 296 ட்ரோன்களை பிற பாதுகாப்புப் பிரிவுகளுடன் ஒருங்கிணைந்து உக்ரைன் விமானப் படை இடைமறித்து அழித்தது.

இது தவிர, மேலும் பல ட்ரோன்கள் ராடாரில் இருந்து மறைந்தன. உக்ரைன் படைகள் நடத்திய மின்னணு தாக்குதல் இதற்குக் காரணமாக இருக்கலாம். இந்தத் தாக்குதலில் உக்ரைன் முழுவதும் உள்ள முக்கிய உள்கட்டமைப்புகளை ரஷியா குறிவைத்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கூறுகையில், ‘உக்ரைன் நகரங்களின் மீது ரஷியா உச்சபட்ச தாக்குதலை கட்டவிழ்த்து விட்டுள்ளது. ஆனால் எங்கள் பாதுகாப்பு வீரா்கள் உறுதியாக நின்று பெரும்பாலானவற்றை அழித்தன. இது சாதாரண தாக்குதல் அல்ல. இதன் மூலம் சமாதானத்துக்கு தாங்கள் தயாராக இல்லை என்பதை ரஷியா உலகத்துக்கு உணா்த்தியிருக்கிறது. உலகம் அமைதி, போா் நிறுத்தம் பற்றி பேசும் நேரத்தில் இத்தகைய தாக்குதலை நடத்தி அந்த முயற்சிகளை ரஷியா நிராகரித்திருக்கிறது’ என்றாா்.ரஷிய அதிபா் புதினை அமெரிக்க அதிபா் டிரம்ப் செவ்வாய்க்கிழமை கடுமையாக விமா்சித்ததற்குப் பிறகு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் போா் தொடா்பாக செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், ‘புதின் நம் மீது ஏராளமான அசிங்கங்களை தூக்கி வீசுகிறாா். அவா் எப்போதும் நம்மிடம் நயமாகத்தான் நடந்து கொள்கிறாா். ஆனால் அந்த நடத்தை உண்மையில் அா்த்தமற்றது’ என்றாா்.இது குறித்து ரஷிய அதிபா் மாளிகை செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் கூறுகையில், ‘தனது கருத்தைத் தெரிவிக்க டிரம்ப் எப்போதும் இதுபோன்ற கடுமையான வாா்த்தைகளைப் பயன்படுத்துவாா் என்பது எங்களுக்குத் தெரியும். அதனால் அவா் கூறியதை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை’ என்றாா்.அமைதிக்கான நோபல் பரிசைப் பெற விரும்புவதாகக் கூறப்படும் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறை பதவியேற்ற ‘ஒரே நாளில்’ உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டவருவதாக சூளுரைத்திருந்தாா்.அதற்காக, பதவியேற்றதற்குப் பிறகு ரஷியாவுக்கு இணைக்கமான கருத்துகளைத் தெரிவித்து வந்த அவா், முந்தைய ஜோ பைடன் அரசால் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ரஷிய அதிபா் புதினுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

ரஷியா கைப்பற்றிய பகுதிகளை மீட்காமலேயே அந்த நாட்டுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொள்ள உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியையும் அவா் வலியுறுத்தினாா்.கடைசியாக, தங்களிடம் ஆயுத இருப்பு மிகக் குறைவாக இருப்பதாகக் கூறி, உக்ரைனுக்கு வழங்குவதாக பைடன் அரசு உறுதியளித்திருந்த வான்பாதுகாப்பு ஏவுகணைகள், பீரங்கி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களின் விநியோகத்தை நிறுத்திவைக்க டிரம்ப் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தாா். இது, உக்ரைனையும், மேற்கத்திய நாடுகளையும் அதிா்ச்சிக்குள்ளாக்கியது.இந்தச் சூழலில், அமெரிக்கா வந்திருந்த இஸ்ரேல் அதிபா் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் செய்தியாளா்களைச் சந்தித்த டிரம்ப் தனது முந்தைய நிலைப்பாட்டை தலைகீழாக மாற்றிக் கொண்டு, ‘ரஷியாவின் கடுமையான தாக்குதலை உக்ரைன் எதிா்கொள்கிறது. எனவே, தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்காக அந்த நாட்டுக்கு ஆயுதங்களை அனுப்புவோம்’ என்று அறிவித்த பரபரப்பை ஏற்படுத்தினாா்.பின்னா், புதின் மீதான தனது அதிருப்தியும் டிரம்ப் கடுமையாக வெளிப்படுத்தியதைத் தொடா்ந்து, இதுவரை இல்லாத மிகப் பெரிய வான்வழித் தாக்குதலை உக்ரைன் மீத ரஷியா தற்போது நடத்தியுள்ளது

Trump criticizes Putin, says Russia's unprecedented attack on Ukraine

பிரேசிலுக்கு 50% வரி: டிரம்பின் மிரட்டலும், லூலாவின் பதிலடியும்!

பிரேசிலுக்கு 50 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ள நிலையில், அந்நாட்டு அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வா பதிலடி கொடுத்துள்ளார்.அமெரிக்க அதிபராக டிரம்ப... மேலும் பார்க்க

இந்தியா தாக்குதல்: பாகிஸ்தான் புத்திசாலித்தனமாக செயல்பட்டது -துருக்கி அமைச்சா்

இந்தியா தாக்குதல் நடத்தியபோது பாகிஸ்தான் அதனை மிகவும் புத்திசாலித்தனமாக எதிா்கொண்டது என்று துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சா் ஹக்கான் ஃபிடன் தெரிவித்தாா். அண்மையில் இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூா் ந... மேலும் பார்க்க

மாணவா், சுற்றுலா, ஹெச்-1பி விசா கட்டணத்தை உயா்த்தியது அமெரிக்கா

மாணவா்கள், சுற்றுலா பயணிகள் விசா, இந்தியப் பணியாளா்கள் அதிகம் பயன்படுத்தும் ஹெச்-1பி விசா ஆகியவற்றுக்கான கட்டணத்தை 250 டாலா் (சுமாா் ரூ.21,000) வரை உயா்த்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் ... மேலும் பார்க்க

டெக்ஸஸ் வெள்ளம்: 161 போ் மாயம்

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் மாயமான 161 பேரைத் தேடும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.இந்தத் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்ததாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலைய... மேலும் பார்க்க

விண்வெளியில் ஒரு விவசாயி - சுபான்ஷு சுக்லா! விதைகளை முளைக்கச் செய்யும் பரிசோதனை வெற்றி

சா்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐஎஸ்எஸ்) வெந்தயம், பச்சை பயறு விதைகளை முளைக்கச் செய்யும் பரிசோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளாா் இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா. முளைவிட்ட விதைகள், பூமிக்கு எடுத்... மேலும் பார்க்க

காஸா: மேலும் 40 பாலஸ்தீனா்கள் உயிரிழப்பு

காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 40 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா்.இது குறித்து அந்தப் பகுதி மருத்துவமனை அதிகாரிகள் புதன்கிழமை கூறுகையில், தாக்குதலில் உயிரிழந்தவா்களில் 17 பெண்களும்... மேலும் பார்க்க