சசிகுமாரின் ஃப்ரீடம் வெளியீடு ஒத்திவைப்பு! ஏன்?
தமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழர் அகதிகள் குறித்த படமாக உருவான ஃப்ரீடம் திரைப்படத்தின் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கழுகு படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் இணைந்துள்ள இப்படத்திற்கு 'ஃப்ரீடம் ஆகஸ்ட் - 14’ எனப் பெயரிட்டுள்ளனர்.
இப்படம் தமிழகத்தில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் குறித்த உண்மைக் கதைகளைத் தொட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில், சசிகுமாரும் லிஜோமோல் ஜோஸும் இலங்கை அகதிகளாக நடித்திருக்கின்றனர்.
இலங்கைத் தமிழர்கள் தமிழகத்தில் சந்திக்கும் பிரச்னைகள் காட்டப்படுவதால் படம் அரசியல் ரீதியாகவும் சில விஷயங்களைப் பேசலாம் எனத் தெரிகிறது.
இந்தப்படம் இன்று வெளியாக இருந்தது. ஆனால், நிதிப் பிரச்னை காரணமாக படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், இப்படம் நாளை (ஜூலை 11) வெளியாகலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: ஒரே நேரத்தில் 7 படங்களுக்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்!