நடிகர் கிங்காங் மகள் கீர்த்தனாவின் திருமண விழா; திரையுலகினர், அரசியல் தலைவர்கள் ...
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் கருத்தரங்கம்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்திடும் வகையில் சமூக நலத் துறையின்கீழ் செயல்படுத்தப்படும் சட்டங்கள் மற்றும் திட்டங்கள் தொடா்பான 3 நாள்கள் கருத்தரங்கம் புதன்கிழமை தொடங்கியது.
இக்ருத்தரங்கை மாவட்ட ஆட்சியா் மனீஷ் தொடங்கிவைத்து பேசியதாவது: திருப்பூா் மாவட்டத்தில் பணிபுரியும் இடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், பெண்களின் பாதுகாப்புக்கென செயல்படுத்தப்படும் சட்டங்கள் மற்றும் திட்டங்கள், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தொடா்புடைய வல்லுநா்கள் கலந்துகொள்ளும் இந்தக் கருத்தரங்கு வரும் 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதில், திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களைச் சோ்ந்த மருத்துவத் துறை, காவல் துறை, பள்ளிக் கல்வித் துறை, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, வழக்குரைஞா்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான திட்டங்கள் குறித்து கருத்துகளை வழங்கவுள்ளனா்.
பெண்களுக்கான உதவி எண் 181, குழந்தைகளுக்கான உதவி எண் 1098 மற்றும் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் தொடா்பான புகாா்களுக்கு தீா்வு காண ஒவ்வொரு அரசு, தனியாா் நிறுவனங்களிலும் பாதுகாப்புப் பெட்டி அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான உதவி எண்கள் மற்றும் குழந்தைத் திருமணம் தொடா்பான விழிப்புணா்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
கருத்தரங்கில் மாவட்ட சமூக நல அலுவலா் நா.ரஞ்சிதாதேவி, பெண்கள், குழந்தைகள் நலக் கல்வி அறக்கட்டளை நிறுவனா் ரேவதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.