மதுரையில் குரு பூர்ணிமா; காஞ்சி மகா பெரியவருக்குச் சிறப்புப் புஷ்பாஞ்சலி; அருள் ...
பாகிஸ்தானில் கனமழைக்கு 11 பேர் பலி!
பாகிஸ்தானின் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழைக்கு இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாநிலத்தின் லாகூர், பஞ்சாப் மாகாணத்தில் சுற்றியுள்ள மாவட்டங்கள், பலுசிஸ்தானின் சில பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. மழைக்கு இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர்.
கனமழையால் பரவலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. லாகூரில் பெய்த மழையால் தாழ்வான பகுதிகள் மற்றும் முக்கிய சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின.
லாகூரின் நீர் மற்றும் சகாதார அமைப்பின் தரவுகளின்படி, இப்பகுதியில் சராசரியாக 58.8 மி.மீ மழை பெய்துள்ளது. நிஷ்தார் டவுன் அதிகபட்சமாக 84 மி.மீ மழையும், அதைத்தொடர்ந்து லட்சுமி சௌக் 78 மிமீ, பனிவாலா தலாப் 74 மி.மீ பதிவாகியுள்ளன.
லாகூரில் சில இடங்களில் வெள்ள நீர் கழிவுநீருடன் கலந்ததால் அங்குள்ள மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இது லாகூரில் உள்ள மோசமான வடிகால் அமைப்பை அம்பலப்படுத்துவதாக தெரிவித்துள்ளது. வெளிப்படையான மின் வயரிங் காரணமாக யாக்கி கேட்டில் குழந்தை ஒன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்தது.
பஞ்சாப் முழுவதும் மழை தொடர்பான சம்பவங்களில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் அவசர மற்றும் மீட்பு சேவைக்கு உதவி எண்களை 1122 அறிவித்துள்ளது.
இதனிடையே, பலுசிஸ்தானில் பலத்த மழை, பலத்த காற்றுக்கு குஜ்தார் மற்றும் மஸ்துங் மாவட்டங்களில் இரண்டு பேர் உயிரிழந்ததாகவும், ஒருவர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.