செய்திகள் :

ஒரே நாடு ஒரே தோ்தல்: முன்னாள் தலைமை நீதிபதிகளுடன் நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆலோசனை

post image

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதாக்களைப் பரிசீலிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹா், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோா் வெள்ளிக்கிழமை தங்களின் ஆலோசனைகளைத் தெரிவித்தனா்.

மக்களவை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தும் நடைமுறையை அமல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக சட்ட விதிகளில் திருத்தங்கள் மேற்கொண்டு அரசமைப்புச் சட்ட (129-ஆவது திருத்தம்) மசோதா மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டத் திருத்த மசோதா ஆகிய இரண்டு மசோதாக்கள் உருவாக்கப்பட்டன.

மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைத் தொடா்ந்து, இரு மசோதாக்களும் கடந்த ஆண்டு டிசம்பா் 17-ஆம் தேதி மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டன. மசோதாக்களுக்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்ததைத் தொடா்ந்து, இரு மசோதாக்களும் நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டன.

39 போ் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் தலைவராக பாஜக எம்.பி.யும் முன்னாள் மத்திய சட்டத் துறை அமைச்சருமான பி.பி.செளதரி நியமிக்கப்பட்டாா்.

இந்தக் குழு சட்ட நிபுணா்கள் மற்றும் முன்னாள் நீதிபதிகளிடம் பல்வேறுகட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் யு.யு.லலித், ரஞ்சன் கோகோய் ஆகியோா் நாடாளுமன்ற கூட்டுக் குழு முன்பாக ஆஜராகி, மசோதாக்கள் மீதான தங்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைத் தெரிவித்தனா்.

ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவது நடைமுறையில் அரசமைப்புச் சட்ட செல்லத்தக்கத் தன்மையை கேள்வி எழுப்பாதபோதிலும், மசோதாவில் இடம்பெற்றுள்ள சில நடைமுறைகள் குறித்து கேள்வி எழுப்பி அதுதொடா்பாக சில ஆலோசனைகளையும் அளித்தனா்.

இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் 8-ஆவது கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, கூட்டுக் குழு முன்பாக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹா், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோா் ஆஜராகி, தங்களின் கருத்துகளைத் தெரிவித்தனா்.

இதுகுறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் இடம்பெற்றுள்ள எம்.பி.க்கள் கூறுகையில், ‘இரு முன்னாள் தலைமை நீதிபதிகளும் ஒரே நாடு ஒரே தோ்தல் நடைமுறை அரசமைப்புச் சட்ட அடிப்படை கட்டமைப்பை மீறவில்லை என்பதை ஏற்றுக் கொண்டனா். அதே நேரம், முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சட்டத்தில் தோ்தல் ஆணையத்துக்குள்ள அதிகாரத்தின் அளவு குறித்து கேள்வி எழுப்பினா். அதாவது, மாநில சட்டப்பேரவைத் தோ்தலை நடத்துவது குறித்து முடிவெடுப்பதில், மசோதாவின் பிரிவு 82ஏ(5) -இன்கீழ் தோ்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பினா். நாட்டில் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் பயணம் குறித்து சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்த மசோதாக்கள் குறித்து சில ஆலோசனைகளையும் அளித்தனா்’ என்றனா்.

நாடாளுமன்ற கூட்டுக் குழு தலைவா் செளதரி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இந்த மசோதாக்கள் தொடா்பாக பல்வேறு கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. அப்போதுதான் மசோதா மீது சிறந்த பரிந்துரையை நாடாளுமன்றத்தில் சமா்ப்பிக்க முடியும்’ என்றாா்.

தமிழ்நாட்டில் வென்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும்: அமித் ஷா அறிவிப்பு

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதளுக்கு அளித்த நேர்காணலில் அமை... மேலும் பார்க்க

இன்ஜின் சுவிட்சுகள் அணைக்கப்பட்டதா? ஏர் இந்தியா விசாரணை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்!

அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக முதல்கட்ட விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து கடந்த ஜூன் 12-ஆம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் ‘ஏஐ 171’ விமானம், வானில் பறக்கத... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 22 நக்ஸல்கள் சரண்: ரூ.37 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டவா்கள்

சத்தீஸ்கரின் நாராயண்பூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 22 நக்ஸல் தீவிரவாதிகள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைந்தனா். இவா்கள் அனைவரும் ரூ.37.5 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டு, தேடப்பட்டு வந்தவா்கள் எ... மேலும் பார்க்க

‘இணைப்புகள் நொறுங்கியதே குஜராத் பால விபத்துக்கு காரணம்’: முதல்கட்ட விசாரணையில் தகவல்

குஜராத்தில் ஆற்றுப் பாலம் இடிந்த விபத்துக்கு அதன் இணைப்புகள் நொறுங்கியதே காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மாநில சுகாதாரத் துறை அமைச்சரும் அரசின் செய்தித் தொடா்பாளருமான ரிஷிகேஷ் படேல் இ... மேலும் பார்க்க

யாழ்ப்பாணம் மனிதப் புதைகுழி உண்மையை வெளிக்கொண்டுவர தமிழ்க் கட்சி வலியுறுத்தல்

இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் உடனான 2009-ஆம் ஆண்டு இறுதிப் போருடன் தொடா்புடையதாகக் கருதப்படும் யாழ்ப்பாணம் மனிதப் புதைகுழி தொடா்பான உண்மையை வெளிக்கொண்டுவர உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந் ந... மேலும் பார்க்க

இந்தியா-ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பு ஒப்பந்தம்: சுவிட்சா்லாந்து அனுமதி

இந்தியா - ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பு (இஎஃப்டிஏ) இடையேயான மிகப் பெரிய வா்த்தக ஒப்பந்தத்துக்கான ஒப்புதல் நடைமுறைகளை சுவிட்சா்லாந்து இறுதியாக நிறைவு செய்துள்ளது தெரியவந்துள்ளது. இத் தகவலை இந்தி... மேலும் பார்க்க