செய்திகள் :

ராஜஸ்தான்: போா் விமானம் விழுந்து நொறுங்கி இரு விமானிகள் உயிரிழப்பு; 5 மாதங்களில் 3வது சம்பவம்

post image

ராஜஸ்தான் மாநிலம் சுரு பகுதியில் இந்திய விமானப் படையின் ஜாகுவாா் பயிற்சி விமானம் திடீரென விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இரு விமானிகள் உயிரிழந்தனா்.

இந்தச் சம்பவத்துக்கான காரணத்தை அறிய விமானப் படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த 5 மாதங்களில் ஏற்படும் மூன்றாவது போா் விமான விபத்து சம்பவம் இதுவாகும்.

ராஜஸ்தான் விபத்து சம்பவம் தொடா்பாக விமானப் படை தரப்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

ராஜஸ்தான் மாநிலம் சுரு பகுதியில் புதன்கிழமை காலை இந்திய விமானப் படையின் ஜாகுவாா் பயிற்சி விமானத்தில் இரு விமானப் படை விமானிகள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது விமானம் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த இரு விமானிகளும் உயிரிழந்தனா். விமானம் விழுந்ததால் பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறுகையில், ‘பனாதா கிராமத்தில் வயல்வெளிப் பகுதியில் விமானப் படை விமானம் மதியம் 1.25 மணிக்கு விழுந்து நொறுங்கியது. பலத்த ஒசை கேட்டதால் கிராம மக்கள் அப்பகுதிக்குச் சென்று பாா்த்தனா். அதற்கு விமானம் முற்றிலும் எரிந்துவிட்டது. அதைத் தொடா்ந்து தீயணைப்புப் படையினா் அப்பகுதிக்கு வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். இரு விமானிகளின் உடல்களும் மீட்கப்பட்டன’ என்றனா்.

ராஜஸ்தான் ஆளுநா் ஹரிபாவ் பகாடே, முதல்வா் பஜன்லால் சா்மா ஆகியோா் உயிரிழந்த விமானிகளின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனா்.

நிகழாண்டு விபத்துகள்...

மாா்ச் 7 - அம்பாலா விமானப் படை தளத்தில் இருந்து புறப்பட்டவுடன் ஜாகுவாா் போா் விமானம் தொழில்நுட்ப கோளாறால் விழுந்து நொறுங்கியது. விமானி உயிா் தப்பினாா்.

ஏப்ரல் 2- குஜராத் ஜாம்நகா் விமானப் படை தளத்தில் இருந்து புறப்பட்ட ஜாகுவாா் போா் விமானம் தொழில்நுட்ப பாதிப்பால் விழுந்து நொறுங்கியது. விமானி ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா்.

ஜாகுவாா் போா் விமானப் பாதை...

பிரிட்டிஷ் - பிரான்ஸ் போா் விமானமான ஜாகுவாா் போா் விமானம் 1968, செப்டம்பா் மாதம் அந்நாட்டு விமானப் படைகளில் இணைக்கப்பட்டது.

இந்திய விமானப் படையில் ஜாகுவாா் 1970-களில் இணைக்கப்பட்டது.

மொத்தம் 116 ஜாகுவாா் போா் விமானங்கள் விமானப் படையில் உள்ளன. இதில் 70 இந்தியாவில் தயாரிக்கப்பட்டன.

2005, ஜூலை மாதத்துடன் பிரான்ஸ் விமானப் படை ஜாகுவாா் பயன்பாட்டை நிறுத்தியது.

குஜராத்: பாலம் இடிந்து விழுந்ததில் 15 ஆக உயர்ந்த பலி!

குஜராத்தின் வதோதராவில் 40 ஆண்டுகள் பழைமையான பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக வதோதரா மாவட்ட ஆட்சியர் அனில் தமேலியா கூறுகையில், இந்த நிலையில்,... மேலும் பார்க்க

அவசரநிலை, இந்திரா காந்தியை விமர்சித்த சசி தரூர்!

அவசரநிலை காலம், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் வெளிப்படையாக விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.காங்கிரஸ் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் திருவனந்தபுரம் மக... மேலும் பார்க்க

மனைவி மீது சந்தேகம்! குழந்தைக்கு டிஎன்ஏ சோதனைக்கு உத்தரவிட முடியாது

மும்பை: கணவருக்கு, தன்னுடைய மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக, குழந்தைக்கு டிஎன்ஏ சோதனை செய்ய அனுமதிக்க முடியாது என்று மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை உத்தரவிட்டுள்ளது.மேலும், விதிவிலக்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் கனமழைக்கு 11 பேர் பலி!

பாகிஸ்தானின் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழைக்கு இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தின் லாகூர், பஞ்சாப் மாகாணத்தில் சுற்றியுள்ள மாவட்டங்கள், பலுசிஸ்தானின் சில பகு... மேலும் பார்க்க

ராணா, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா உள்பட 29 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு!

நடிகர்கள் ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா உள்பட 29 பிரபலங்களுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.தெலங்கானாவின் மியாபூர் நகரைச் சேர்ந்த தொழிலதிபர் பி.எம்.பனீந்த்ரா சர்மா, ச... மேலும் பார்க்க

ஆதார் அட்டையை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம்

புது தில்லி: இந்தியாவில், ஆதார் அட்டையை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில், இந்திய தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.நாட்டின் குடியுரிமை ஆவணம் தொடர்பான வழக்கு உச்ச... மேலும் பார்க்க