வரலாற்று நாயகன்: ஒரே போட்டியில் 4 உலக சாதனைகளை நிகழ்த்திய மெஸ்ஸி!
ஆபாச தளங்களில் பெண் வழக்குரைஞரின் விடியோக்க: 48 மணி நேரத்தில் அகற்ற உத்தரவு!
பெண் வழக்குரைஞரின் விடியோ மற்றும் புகைப்படங்களை இணையதளத்தில் இருந்து 48 மணி நேரத்தில் அகற்ற மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தனது புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை இணையதளங்கள் மற்றும் ஆபாச தளங்களில் பகிரப்படுவதைத் தடுக்கவும், அவற்றை நீக்கவும் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் பெண் வழக்குரைஞா் மனு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பெண் வழக்குரைஞரின் விடியோ மற்றும் புகைப்படங்கள் 70-க்கும் மேற்பட்ட இணையதளங்களில் பகிரப்பட்டுள்ளது வேதனையளிக்கிறது. அந்த விடியோ மற்றும் புகைப்படங்களை மத்திய அரசு 48 மணி நேரத்தில் நீக்க வேண்டும். பொதுமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை. இதுபோன்ற வழக்குகளை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து, காவல் துறை டிஜிபி, தமிழக போலீஸாருக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.
இந்த வழக்கில், டிஜிபி-யை எதிா்மனுதாரராக சோ்த்து உத்தரவிட்ட நீதிபதி, இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.
இந்த வழக்கு விசாரணையின்போது பாதிக்கப்பட்ட பெண் வழக்குரைஞரை நேரில் சந்தித்து பேச விரும்புவதாகக் கூறிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கண்கலங்கினாா்.