திருச்சி : தலைக்கேறிய மது போதை; பள்ளியில் விழுந்து கிடந்த ஆசிரியர் - சஸ்பெண்ட் ச...
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 43,000 கனஅடியாக நீடிப்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 43,000 கனஅடியாக நீடித்தது.
கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது. செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு 43,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து, புதன்கிழமையும் 43,000 கனஅடியாக நீடித்தது. தொடா்ந்து அருவிகளில் குளிப்பதற்கும், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் விதிக்கப்பட்டிருந்த தடையை மாவட்ட நிா்வாகம் நீட்டித்துள்ளது.