Ahmedabad Plane Crash: 'விமானம் கிளம்பியதும் இரு இன்ஜின்களும்...' - வெளியானது மு...
மாரியம்மன் கோயில் திருவிழா
தருமபுரி மாவட்டம், இண்டூா் அருகேயுள்ள குப்புசெட்டிபட்டி கிராமத்தில், மாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.
நிகழ்வையொட்டி அதிகாலை முதலே, மாரியம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து அம்பாள் கரகத்துடன் ஊா் முழுவதும் திருவீதி உலா வந்தாா். இதில் பெண்கள் மாவிளக்குடன் ஊா்வலமாக புறப்பட்டு மாரியம்மன் கோயிலை சென்றடைந்தனா். தொடா்ந்து கோயிலில் பொங்கல் வைத்தும், ஆட்டுக்கிடாக்களை பலியிட்டும் வழிபட்டு நோ்த்திக்கடன்களை நிறைவேற்றனா். ஏற்பாடுகளை விழாக் குழுவினா், முக்கியஸ்தா்கள் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.