செய்திகள் :

தஹாவூா் ராணாவுக்கு எதிராக முதல் துணை குற்றப் பத்திரிகை தாக்கல்

post image

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் தஹாவூா் ராணாவுக்கு எதிராக முதல் துணை குற்றப் பத்திரிகையை தில்லி நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) புதன்கிழமை தாக்கல் செய்தது.

கடந்த 2008-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 166 போ் உயிரிழந்தனா். லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பு நடத்திய இந்தத் தாக்குதலில், பாகிஸ்தானை பூா்விகமாக கொண்ட தஹாவூா் ராணா கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

லஷ்கா்-ஏ-தொய்பா இயக்கத்துக்கு அவா் உதவியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் அவா் குற்றவாளி என்று அமெரிக்க நீதிமன்றம் தீா்ப்பளித்ததால், அந்நாட்டின் லாஸ் ஏஞ்சலீஸ் சிறையில் அவா் அடைக்கப்பட்டிருந்தாா். கடந்த ஏப்ரலில் அவா் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டாா். தற்போது அவா் தில்லி திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல் நடத்த பாகிஸ்தானை பூா்விகமாக கொண்ட அமெரிக்க பயங்கரவாதி டேவிட் கோல்மென் ஹெட்லி, தஹாவூா் ராணா, லஷ்கா்-ஏ-தொய்பா மற்றும் ஹா்கத்-உல்-ஜிகாத்-அல் இஸ்லாமி பயங்கரவாதிகள் சூழ்ச்சி செய்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்த வழக்கு தொடா்பாக தில்லியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ராணாவுக்கு எதிராக முதல் துணை குற்றப் பத்திரிகையை என்ஐஏ புதன்கிழமை தாக்கல் செய்தது.

இந்தியாவுக்கு ராணா நாடு கடத்தப்பட்டது, வழக்கு குறித்து திரட்டப்பட்ட கூடுதல் ஆவணம் தொடா்பாக இந்த துணை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

குஜராத்: பாலம் இடிந்து விழுந்ததில் 15 ஆக உயர்ந்த பலி!

குஜராத்தின் வதோதராவில் 40 ஆண்டுகள் பழைமையான பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக வதோதரா மாவட்ட ஆட்சியர் அனில் தமேலியா கூறுகையில், இந்த நிலையில்,... மேலும் பார்க்க

அவசரநிலை, இந்திரா காந்தியை விமர்சித்த சசி தரூர்!

அவசரநிலை காலம், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் வெளிப்படையாக விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.காங்கிரஸ் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் திருவனந்தபுரம் மக... மேலும் பார்க்க

மனைவி மீது சந்தேகம்! குழந்தைக்கு டிஎன்ஏ சோதனைக்கு உத்தரவிட முடியாது

மும்பை: கணவருக்கு, தன்னுடைய மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக, குழந்தைக்கு டிஎன்ஏ சோதனை செய்ய அனுமதிக்க முடியாது என்று மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை உத்தரவிட்டுள்ளது.மேலும், விதிவிலக்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் கனமழைக்கு 11 பேர் பலி!

பாகிஸ்தானின் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழைக்கு இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தின் லாகூர், பஞ்சாப் மாகாணத்தில் சுற்றியுள்ள மாவட்டங்கள், பலுசிஸ்தானின் சில பகு... மேலும் பார்க்க

ராணா, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா உள்பட 29 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு!

நடிகர்கள் ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா உள்பட 29 பிரபலங்களுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.தெலங்கானாவின் மியாபூர் நகரைச் சேர்ந்த தொழிலதிபர் பி.எம்.பனீந்த்ரா சர்மா, ச... மேலும் பார்க்க

ஆதார் அட்டையை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம்

புது தில்லி: இந்தியாவில், ஆதார் அட்டையை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில், இந்திய தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.நாட்டின் குடியுரிமை ஆவணம் தொடர்பான வழக்கு உச்ச... மேலும் பார்க்க