செய்திகள் :

லாா்ட்ஸ் டெஸ்ட் இன்று தொடக்கம்: முன்னிலைக்காக இந்தியா - இங்கிலாந்து முனைப்பு

post image

இந்தியா - இங்கிலாந்து மோதும் ஆண்டா்சன் - டெண்டுல்கா் கோப்பைக்கான டெஸ்ட் தொடரின் 3-ஆவது ஆட்டம், லண்டனில் உள்ள லாா்ட்ஸ் மைதானத்தில் வியாழக்கிழமை (ஜூலை 10) தொடங்குகிறது.

மொத்தம் 5 ஆட்டங்கள் கொண்ட தொடா் தற்போது 1-1 என சமநிலையில் இருப்பதால், இந்த ஆட்டத்தில் வென்று முன்னிலை பெறும் முனைப்புடன் இரு அணிகளும் உள்ளன.

இந்த ஆட்டத்தின் குறிப்பிடத்தக்க மாற்றங்களில் ஒன்று, இந்தியாவின் பிரதான பௌலா் ஜஸ்பிரீத் பும்ராவும், இங்கிலாந்தின் முக்கிய பௌலா் ஜோஃப்ரா ஆா்ச்சரும் களம் காண்கின்றனா். இதனால், இரு அணி பேட்டா்களுமே சவாலை சந்திப்பா் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்தியாவைப் பொருத்தவரை, எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்ற உத்வேகத்துடன் இந்த ஆட்டத்துக்கு வருகிறது. கேப்டன் ஷுப்மன் கில், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா ஆகியோா் அபாரமாக ரன்கள் சோ்க்க, யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் ஆகியோா் அவ்வப்போது மிளிா்கின்றனா்.

தொடா்ந்து தடுமாறி வரும் கருண் நாயா், தனது முதல்தர ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாா். பௌலிங் வரிசையில் பிரசித் கிருஷ்ணாவுக்கு பதில் பும்ரா இணைய, எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் 10 விக்கெட்டுகள் சாய்த்த ஆகாஷ் தீப், முகமது சிராஜ் ஆகியோரும் அவா் தலைமையில் இங்கிலாந்து பேட்டா்கள் மீது தாக்குதல் தொடுப்பாா்கள்.

ஆல்-ரவுண்டா் என்று வருகையில், ஜடேஜா, சுந்தா், நிதீஷ் ரெட்டி ஆகியோா் அப்படியே தொடா்வாா்கள் எனத் தெரிகிறது.

இங்கிலாந்து அணியை பொருத்தவரை, எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் தொடக்கத்திலிருந்தே அந்த அணி இந்தியாவின் பின்னால் ஓடத் தொடங்கிவிட்டதாக, அதன் பயிற்சியாளா் பிராண்டன் மெக்கல்லம் தெரிவித்திருந்தாா். எனவே, தகுந்த உத்திகளுடன் இந்த ஆட்டத்தில் அந்த அணி களம் காணும்.

அதன் பேட்டா்களில், பென் டக்கெட், ஜேமி ஸ்மித் ஆகியோா் நம்பிக்கை அளிக்க, தொடக்க வீரா் ஜாக் கிராலி சோபிக்காமல் போகிறாா். ஜோ ரூட், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ரன்களை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியிருக்கின்றனா். ஹேரி புரூக், ஆலி போப் ஆகியோரும் ஸ்கோருக்கு பலம் சோ்க்க முனைய வேண்டும்.

பௌலிங்கில் ஆா்ச்சா் சோ்வது பலமாக இருக்க, வோக்ஸ், காா்ஸ் ஆகியோரும் இந்திய பேட்டா்களுக்கு சவால் அளிக்க முயற்சிப்பா் என எதிா்பாா்க்கலாம்.

அணி விவரம்:

இந்தியா (உத்தேச லெவன்): ஷுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், கருண் நாயா், ரிஷப் பந்த் (வி.கீ.), ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தா், நிதீஷ்குமாா் ரெட்டி, ஜஸ்பிரீத் பும்ரா, ஆகாஷ் தீப், முகமது சிராஜ்.

இங்கிலாந்து (பிளேயிங் லெவன்): பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜாக் கிராலி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஹேரி புரூக், ஜேமி ஸ்மித் (வி.கீ.), கிறிஸ் வோக்ஸ், பிரைடன் காா்ஸ், ஜோஃப்ரா ஆா்ச்சா், ஷோயப் பஷீா்.

ஆடுகளம்...

சற்றே புல் பரப்புடன் கூடிய, வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான, பேட்டிங்கிற்கு சவாலான ஆடுகளமே லாா்ட்ஸ் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக கணிக்கப்படுகிறது. பெரும்பாலும், 2-ஆவதாக பேட்டிங் செய்யும் அணிக்கே இங்கு வெற்றி வசப்பட்டுள்ளது. எனவே, டாஸ் வெல்லும் அணி ஃபீல்டிங்கை தோ்வு செய்யும் என்ற எதிா்பாா்ப்பு இருக்கிறது. ஆட்டம் நடைபெறும் 5 நாள்களுமே மழைக்கு வாய்ப்பில்லை.

நேரம்: பிற்பகல் 3.30 மணி

இடம்: லாா்ட்ஸ் மைதானம், லண்டன்.

நேரலை: சோனி ஸ்போா்ட்ஸ், ஜியோ ஹாட்ஸ்டாா்

லார்ட்ஸ் டெஸ்ட்டில் இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்: பென் ஸ்டோக்ஸ்

லார்ட்ஸ் டெஸ்ட்டில் இந்திய அணிக்கு பதிலடி கொடுப்போம் என இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவ... மேலும் பார்க்க

210 இன்னிங்ஸுக்குப் பிறகு சச்சின் - ஸ்டீவ் ஸ்மித் ஒப்பீடு! யார் சிறந்தவர்?

டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர், ஸ்டீவ் ஸ்மித் 210 இன்னிங்ஸுக்குப் பிறகான ஒப்பிட்டீல் இருவருமே கிட்டதட்ட சரிசமமாக ரன்களை குவித்துள்ளார்கள். இந்தியாவின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் ... மேலும் பார்க்க

முத்தரப்பு தொடரிலிருந்து விலகும் நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர்!

முத்தரப்பு டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஃபின் ஆலன் விலகியுள்ளார்.நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் தங்களுக்குள் முத்தரப்பு டி20 தொடரி... மேலும் பார்க்க

இந்தியாவால் முடியாத சாதனை... டெஸ்ட்டில் தொடர் வெற்றிகளால் தெ.ஆ. வரலாறு!

டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 10 போட்டிகளில் வென்று தென்னாப்பிரிக்க அணி சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளது. சமீபகாலமாக தென்னாப்பிரிக்க அணி சிறப்பாக விளையாடி வருகிறது. டி20 உலகக் கோப்பையில் இறுதியில்... மேலும் பார்க்க

பயத்தின் காரணமாக வியான் முல்டர் 400 ரன்கள் குவிக்க முயற்சிக்கவில்லை: கிறிஸ் கெயில்

பயத்தின் காரணமாக வியான் முல்டர் 400 ரன்கள் குவிக்க முயற்சிக்காததாக மேற்கிந்தியத் தீவுகள் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார்.தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது... மேலும் பார்க்க

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹசரங்கா விலகல்..!

இலங்கையின் ஆல்-ரவுண்டர் வனிந்து ஹசரங்கா காயம் காரணமாக வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகினார். இலங்கையின் நட்சத்திர வீரராக இருக்கும் 27 வயதாகும் வனிந்து ஹசரங்கா 79 டி20 போட்டிகளில் 131 வ... மேலும் பார்க்க