வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹசரங்கா விலகல்..!
இலங்கையின் ஆல்-ரவுண்டர் வனிந்து ஹசரங்கா காயம் காரணமாக வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகினார்.
இலங்கையின் நட்சத்திர வீரராக இருக்கும் 27 வயதாகும் வனிந்து ஹசரங்கா 79 டி20 போட்டிகளில் 131 விக்கெட்டுகள் 712 ரன்கள் எடுத்துள்ளார்.
வங்கதேச அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
இதில் டெஸ்ட்டை 1-0 என இலங்கை வென்றது. இதையடுத்து நடந்த ஒருநாள் தொடரிலும் 2-1 என இலங்கை வென்றது.
அடுத்ததாக இவ்விரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் ஜூலை 10-இல் தொடங்குகிறது. இதில், 17 பேர் கொண்ட அணியை சரித் அசலங்கா கேப்டனாக வழிநடத்துகிறார்.
வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணி விவரம்
சரித் அசலங்கா (கேப்டன்), பதும் நிசங்கா, குசல் மெண்டிஸ், தினேஷ் சண்டிமால், குசல் பெரேரா, கமிந்து மெண்டிஸ், அவிஷ்கா ஃபெர்னாண்டோ, தசுன் ஷானகா, துனித் வெல்லாலகே, வனிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்ஷனா, ஜெஃப்ரி வாண்டர்சே, சமிகா கருணாரத்னே, மதீஷா பதிரானா, நுவான் துஷாரா, பினுரா ஃபெர்னாண்டோ, ஈசன் மலிங்கா.
இந்தத் தொடரிலிருந்துதான் வனிந்து ஹசரங்கா காயம் காரணமாக விலகியுள்ளார்.