இந்தியாவால் முடியாத சாதனை... டெஸ்ட்டில் தொடர் வெற்றிகளால் தெ.ஆ. வரலாறு!
டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 10 போட்டிகளில் வென்று தென்னாப்பிரிக்க அணி சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளது.
சமீபகாலமாக தென்னாப்பிரிக்க அணி சிறப்பாக விளையாடி வருகிறது. டி20 உலகக் கோப்பையில் இறுதியில் இந்தியாவுடன் கடைசி ஓவரில் தோற்றது.
லண்டனில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றதும் குறிப்பிடத்தக்கது.
ஜிம்பாப்வே அணியுடனான தொடரரில் புதிய கேப்டன் வியான் முல்டர் தலைமையில் தெ.ஆ. அணி அசத்தியது.
தற்போது, ஜிம்பாப்வேக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்கா, இன்னிங்ஸ் மற்றும் 236 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.
இதையடுத்து, 2 ஆட்டங்கள் கொண்ட தொடரை அந்த அணி 2-0 என முழுமையாகக் கைப்பற்றியது.
டெஸ்ட்டில் 3 அணிகள் மட்டுமே தொடர்ச்சியாக 10 டெஸ்ட்டில் வென்றுள்ளது. அந்த சாதனைப் பட்டியலில் தென்னாப்பிரிக்க அணியும் இணைந்துள்ளது.
இந்திய அணி தொடர்ச்சியாக 2019-இல் 7 போட்டிகளில் வென்றிருக்கிறது.
டெஸ்ட் வரலாற்றில் தொடர் வெற்றிகள்
1. ஆஸ்திரேலியா - 16 முறை 1999-2001)
2. ஆஸ்திரேலியா - 16 முறை (2006-2008)
3. மேற்கிந்தியத் தீவுகள் - 11 முறை (1984)
4. தென்னாப்பிரிக்கா - 10 முறை (2024-2025)