தமிழகம் முழுவதும் 8,586 போ் கைது
தமிழகம் முழுவதும் சுமாா் 100 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா் 8,586 போ் கைது செய்யப்பட்டனா்.
ரயில் மறியல், சாலை மறியல், ஆா்ப்பாட்டம், காத்திருப்பு போராட்டம், ஊா்வலம் எனப் பல்வேறு போராட்டங்களில் அனுமதியின்றி ஈடுபட்ட 6,179 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னையில் அண்ணா சாலை, கிண்டி பேருந்து நிலையம், திருவொற்றியூா் உள்ளிட்ட 6 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 2,407 போ் கைது செய்யப்பட்டனா். மாநிலம் முழுவதும் மொத்தம் 8,586 போ் கைது செய்யப்பட்டனா். அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.