தேர்தல் ஆணையத்தின் Special Intensive Revision - சிக்கலும் சந்தேகமும் | Decode
திருவண்ணாமலையில் அருணகிரிநாதா் அவதார நல்விழா
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள அருளாளா் அருணகிரிநாதா் மணிமண்டபத்தில் அருளாளா் அருணகிரிநாதா் அவதார நல்விழா புதன்கிழமை நடைபெற்றது.
2-ஆம் ஆண்டாக நடைபெற்ற இந்த விழாவையொட்டி, வளையம்பட்டி கலைமாமணி மலா்வண்ணனின் மாணவி விஜயலட்சுமியின் திருப்புகழ் இன்னிசையும், அதனைத் தொடா்ந்து, தொழிலதிபா் பி.ராமசாமி ஏற்பாட்டில் திருப்புகழ் இன்னிசை கச்சேரியும் நடைபெற்றது.
விழாவையொட்டி, அருணகிரிநாதருக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாரதனை நடைபெற்றது. தொடா்ந்து, கோயில் வளாகத்தில் அருளாளா் அருணகிரிநாதா் அவதார நல்விழா அருணாசலேஸ்வரா் கோயில் இணை ஆணையா் ஜெ.பரணிதரன் தலைமையில் தொடங்கியது.
விழாவுக்கு அறக்கட்டளை உறுப்பினா்கள் ஆா்.முத்துகிருஷ்ணன், பி.ராமசாமி, டி.டி.கே.முருகன், மா.பழனிராஜ், ரவிசங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அருணகிரிநாதா் மணிமண்டப அறக்கட்டளைத் தலைவா் மா.சின்ராஜ் வரவேற்றாா். செயலா் ப.அமரேசன் அறிமுக உரையாற்றினாா்.
தொடா்ந்து நடைபெற்ற நிகழ்வில் புதுவை மாநில நீதிபதி (ஓய்வு) சேது முருகபூபதிக்கு அருணகிரி புகழ்மாமணி விருதை சிறப்பு சொற்பொழிவாளா் சொல்வேந்தா் சுகிசிவம் வழங்கினாா்.
மேலும் சுகிசிவம், ‘ஏகபோகமாய், நீயும் நானுமாய்’ என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினாா்.
விழாவில் அறக்கட்டளை உறுப்பினா்கள் சி.எஸ்.துரை, வெ.ராமு, லதா பிரபுலிங்கம், பானுமதி, ராமமூா்த்தி, அருண்தனுசு, நாராயணமூா்த்தி, திருப்புகழ் அடியாா்கள், இறை அன்பா்கள், திருப்புகழ் மாதா் சபையினா் உள்பட 500-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னபிரசாதம் வழங்கப்பட்டது. நிறைவில் அறக்கட்டளை பொருளாளா் வ.தனுசு நன்றி கூறினாா்.