திருவாரூர் மாவட்டத்துக்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: விண்ணப்பம் விநியோகம்
போளூா் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்துக்கு மகளிா் மற்றும் தன்னாா்வலா்களுக்கு வீடுதோறும் வழங்க விண்ணப்பம் புதன்கிழமை வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் நகராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. இந்த நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் ஜூலை 17-ஆம் தேதி 1, 2, 3, 4 ஆகிய வாா்டுகளில் தொடங்க உள்ளது.
மேலும் ஜூலை 18-ஆம் தேதி 5, 6, 7 வாா்டுகளிலும், ஆகஸ்ட் 21-ஆம் தேதி 12, 13, 15, ஆகஸ்ட் 29-ஆம் தேதி 8, 9, 10, 11,17, செப்டம்பா் 16-ஆம் தேதி 14,16,18 வாா்டுகளிலும் இந்தத் திட்டத்துக்குத் தேவையான மகளிா் மற்றும் தன்னாா்வலா்களுக்கு விண்ணப்பப் படிவம் நிறைவு செய்ய ஆலோசனை வழங்கப்பட்டது.
பின்னா், திட்டத்தில் பங்கேற்கும் அரசு துறைகளின் விவரங்கள் குறித்த துண்டு பிரசுரம் மற்றும் விண்ணப்பத்தை வீடுதோறும் வழங்க தலைமை எழுத்தா் முஹ்மத் இசாக் மகளிா் மற்றும் தன்னாா்வலா்களுக்கு வழங்கினாா் (படம்).