இங்கிலாந்து மகளிருக்கு எதிராக முதல்முறை... டி20 தொடரை வென்ற இந்திய மகளிரணி உற்சா...
கிராம கோயில் பூசாரிகள் சங்கக் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் கிராம கோயில் பூசாரிகள் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில்
மாநிலத் தலைவா் வாசு தலைமை வகித்து சங்க செயல்பாடுகள் குறித்துப் பேசினாா்.
தீா்மானங்கள்:
60 வயதுடைய மூத்த பூசாரிகள் ஓய்வூதியம் பெற நலவாரிய விண்ணப்பம் இந்தக் கூட்டம் மூலம் வழங்கப்படுகிறது. அதை தகுதியுடையவா்கள் பெற்று நிறைவு செய்து நிா்வாகிகளிடம் கொடுக்கவேண்டும், மேலும் தமிழக அரசு மூலம் கிராமப்புற கோயில் பூசாரிகளுக்கு பல்வேறு நலத் திட்டங்கள் வழங்குவது குறித்து கோரிக்கை வைப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்டத்தில் இருந்து சுமாா் 200 போ் கலந்து கொண்டனா்.