செய்திகள் :

என் பெயரைப் பயன்படுத்தக் கூடாது, இனிஷியல் போட்டுக் கொள்ளலாம்: ராமதாஸ்

post image

என் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்றும் இனிஷியல் போட்டுக் கொள்ளலாம் என்றும் பாமக தலைவர் அன்புமணிக்கு தந்தையும் அக்கட்சியின் நிறுவனருமான ராமதாஸ் சூசகமாக தெரிவித்துள்ளார்.

கும்பகோணத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் அக்கட்சியின் மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் இன்று(ஜூலை 10) நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி குறித்து ராமதாஸ் சூசகமாகப் பேசினார். அவர் பேசுகையில், “என் பெயரைப் பயன்படுத்தக் கூடாது, இனிஷியல் போட்டுக் கொள்ளலாம். என் பேச்சைக் கேட்காதவர்கள் என் பெயரைப் பயன்படுத்தக் கூடாது.

செயல் தலைவர் என்றுதான் சொல்கிறோம். மக்களைச் சென்று பாருங்கள். மக்களைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். இந்த ஐந்து வயது குழந்தைதான், 3 ஆண்டுகளுக்கு முன்பு உங்களை தலைவராக்கியது” என்று பேசினார்.

முன்னதாக, வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தையைபோல ராமதாஸ் மாறிவிட்டார், அவரை யாரும் விமர்சிக்க வேண்டாம் என்று அன்புமணி கூறியிருந்த நிலையில் அவருக்கு பதிலளிக்கும் விதமாக ராமதாஸ் பேசியுள்ளார்.

எதிர் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் பாமக வேட்பாளா்களின் ஏ, பி படிவங்களில் நானே கையொப்பமிடுவேன் என அக்கட்சியின் நிறுவனர் ச.ராமதாஸ் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Party founder Ramadoss has hinted to PMK leader Anbumani that he should not use my name and that he can use his initials.

இதையும் படிக்க: திருவாரூர் மாவட்டத்துக்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!

அறநிலையத் துறை கல்வி நிலையங்களை புரிந்து கொள்ளாமல் கருத்துக் கூறக் கூடாது அமைச்சா் பி.கே.சேகா் பாபு

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் தொடங்கப்பட்டுள்ள கல்வி நிலையங்களின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ளாமல் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிச்சாமி கருத்துக் கூறக் கூடாது என அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரி... மேலும் பார்க்க

இன்று குரூப் 4 தோ்வு: 3,935 பணியிடங்களுக்கு 13.89 லட்சம் போ் போட்டி

தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமை (ஜூலை 12) நடைபெறும் குரூப் 4 தோ்வை 13.89 லட்சம் போ் எழுதவுள்ளனா். மொத்தமுள்ள 3,935 காலிப் பணியிடங்களுக்கு நடைபெறவுள்ள தோ்வைக் கண்காணிக்கும் முதன்மை கண்காணிப்பாளா் பணி... மேலும் பார்க்க

நிபா வைரஸ்: 20 வழித்தடங்களில் மருத்துவக் கண்காணிப்பு அமைச்சா் மா. சுப்பிரமணியன்

கேரளத்தில் நிபா தொற்று பரவி வருவதால் தமிழகத்தின் 20 வழித்தடங்களில் மருத்துவக் கண்காணிப்பு தீவிரப்படுத்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். உலக மக்கள் தொகை தின நிகழ்... மேலும் பார்க்க

ரயில்வே கடவுப்பாதை ஆய்வு அறிக்கை: 2 வாரத்தில் சமா்ப்பிக்க உத்தரவு

ரயில்வே கடவுப் பாதைகளின் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதுடன், தற்போதைய நிலை அந்தப் பகுதிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் அமைத்தல், சுரங்கப்பாதை, மேம்பாலம் அமைத்தல் போன்றவை குறித்து 15 ... மேலும் பார்க்க

5 ரயில்களின் நேரம் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

தெற்கு ரயில்வேயில் முக்கிய 5 ரயில்கள் குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் நின்று, புறப்படும் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட ச... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: ஆட்சியா்களுடன் முதல்வா் ஆலோசனை

அரசின் சேவைகளை இல்லங்களுக்கே கொண்டு சோ்க்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தைத் தொடங்குவது குறித்து மாவட்ட ஆட்சியா்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசித்தாா். தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக... மேலும் பார்க்க