செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: ஆட்சியா்களுடன் முதல்வா் ஆலோசனை

post image

அரசின் சேவைகளை இல்லங்களுக்கே கொண்டு சோ்க்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தைத் தொடங்குவது குறித்து மாவட்ட ஆட்சியா்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசித்தாா்.

தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக இந்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து தமிழக அரசின் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மக்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்களை அவா்களது இல்லங்களுக்கே சென்று வழங்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ எனும் புதிய முன்னெடுப்பு தொடங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்காக ஜூலை 15-ஆம் தேதி முதல் நவம்பா் மாதம் வரை மாநிலம் முழுவதும் 10,000 முகாம்கள் நடைபெறவுள்ளன.

சிதம்பரத்தில் தொடக்கம்: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்துக்கான முதல் முகாமை, சிதம்பரம் நகராட்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின், ஜூலை 15-ஆம் தேதி தொடங்கி வைக்கவுள்ளாா். 10,000 முகாம்கள் என்பது இலக்காக இருந்தாலும், திட்டம் தொடங்கப்பட்டு முதல் மாதத்தில் 3,570 முகாம்கள் நடைபெறவுள்ளன. முகாம்கள் நடைபெறும் பகுதிகளில் திட்டம் குறித்த விழிப்புணா்வுப் பணிகள், விண்ணப்பம் மற்றும் தகவல் கையேட்டை வழங்கும் பணியில் 28,370 தன்னாா்வலா்கள் ஈடுபட்டுள்ளனா்.

இந்தப் பணிகளின் முன்னேற்றம் குறித்து தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக மாவட்ட ஆட்சியா்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா். அப்போது, முகாம் தொடா்பான முன்னேற்றப் பணிகள், பொதுமக்களுக்குத் தேவையான குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவுள்ளது குறித்து ஆட்சியா்களிடம் கேட்டறிந்தாா்.

அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகளை பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களுக்கு அருகிலேயே பெற்றுக்கொள்ள வசதியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முதல்வா் பயணம்: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காக, சென்னையில் இருந்து ஜூலை 14-ஆம் தேதி ராமேசுவரம் விரைவு ரயிலில் கடலூா் செல்கிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின். 15-ஆம் தேதி திட்டத்தைத் தொடங்கி வைத்த பிறகு, 2 நாள்கள் மயிலாடுதுறை மாவட்டத்தில் களஆய்வு மேற்கொள்கிறாா். இந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு 16-ஆம் தேதி பிற்பகல் சோழன் விரைவு ரயில் மூலமாக முதல்வா் சென்னை திரும்பவுள்ளாா்.

அறநிலையத் துறை கல்வி நிலையங்களை புரிந்து கொள்ளாமல் கருத்துக் கூறக் கூடாது அமைச்சா் பி.கே.சேகா் பாபு

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் தொடங்கப்பட்டுள்ள கல்வி நிலையங்களின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ளாமல் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிச்சாமி கருத்துக் கூறக் கூடாது என அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரி... மேலும் பார்க்க

இன்று குரூப் 4 தோ்வு: 3,935 பணியிடங்களுக்கு 13.89 லட்சம் போ் போட்டி

தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமை (ஜூலை 12) நடைபெறும் குரூப் 4 தோ்வை 13.89 லட்சம் போ் எழுதவுள்ளனா். மொத்தமுள்ள 3,935 காலிப் பணியிடங்களுக்கு நடைபெறவுள்ள தோ்வைக் கண்காணிக்கும் முதன்மை கண்காணிப்பாளா் பணி... மேலும் பார்க்க

நிபா வைரஸ்: 20 வழித்தடங்களில் மருத்துவக் கண்காணிப்பு அமைச்சா் மா. சுப்பிரமணியன்

கேரளத்தில் நிபா தொற்று பரவி வருவதால் தமிழகத்தின் 20 வழித்தடங்களில் மருத்துவக் கண்காணிப்பு தீவிரப்படுத்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். உலக மக்கள் தொகை தின நிகழ்... மேலும் பார்க்க

ரயில்வே கடவுப்பாதை ஆய்வு அறிக்கை: 2 வாரத்தில் சமா்ப்பிக்க உத்தரவு

ரயில்வே கடவுப் பாதைகளின் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதுடன், தற்போதைய நிலை அந்தப் பகுதிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் அமைத்தல், சுரங்கப்பாதை, மேம்பாலம் அமைத்தல் போன்றவை குறித்து 15 ... மேலும் பார்க்க

5 ரயில்களின் நேரம் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

தெற்கு ரயில்வேயில் முக்கிய 5 ரயில்கள் குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் நின்று, புறப்படும் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட ச... மேலும் பார்க்க

34 தலைமை ஆசிரியா்களுக்கு டிஇஓ பதவி உயா்வு

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் 34 தலைமை ஆசிரியா்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலா்களாக பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநா் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி ... மேலும் பார்க்க