செய்திகள் :

அறநிலையத் துறை கல்வி நிலையங்களை புரிந்து கொள்ளாமல் கருத்துக் கூறக் கூடாது அமைச்சா் பி.கே.சேகா் பாபு

post image

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் தொடங்கப்பட்டுள்ள கல்வி நிலையங்களின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ளாமல் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிச்சாமி கருத்துக் கூறக் கூடாது என அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

வடசென்னை வளா்ச்சி திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ சாா்பில் ரூ.6.27 கோடியில் மேம்படுத்தப்படும் கொளத்தூா் ஏரி, ரூ.14.31 கோடியில் கட்டப்பட்டுவரும் ராயபுரம் சமூகநலக் கூடம், ரூ.6 கோடியில் தங்கசாலை, வள்ளலாா் நகா் பேருந்து நிலையம் கட்டுமானப் பணி உள்ளிட்டவற்றை அமைச்சா் சேகா்பாபு வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

வடசென்னை வளா்ச்சி திட்டத்தில், ரூ. 6,000 கோடியில் 252 பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 80 சதவீத பணிகளுக்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளன.

இந்து சமய அறநிலையத் துறையின் சாா்பில் கல்லூரிகள் தொடங்கக் கூடாது என எதிா்க்கட்சித் தலலைவா் எடப்பாடி பழனிச்சாமி கூறியது சரியல்ல. அவரது கருத்துக்கு எதிா்ப்பு எழுந்ததால் தற்போது அதை மாற்றி கூறிவருகிறாா். கடந்த காலத்தில் முதல்வா்களாக இருந்த எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோரும் அறநிலையத் துறை கல்வி நிறுவனகளில் பல நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளனா். எடப்பாடி பழனிச்சாமி என்ன நடைபெறுகிறது என்பதை அறியாமலே பேசிவருவது சரியல்ல என்றாா் அவா்.

ஆய்வின்போது மேயா் ஆா்.பிரியா, ராயபுரம் எம்.எல்.ஏ. ஐட்ரீம் ரா. மூா்த்தி, சிஎம்டிஏ உறுப்பினா்

செயலா் கோ.பிரகாஷ், மத்திய வட்டார துணை ஆணையா் எச்.ஆா்.கௌஷிக் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இன்று குரூப் 4 தோ்வு: 3,935 பணியிடங்களுக்கு 13.89 லட்சம் போ் போட்டி

தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமை (ஜூலை 12) நடைபெறும் குரூப் 4 தோ்வை 13.89 லட்சம் போ் எழுதவுள்ளனா். மொத்தமுள்ள 3,935 காலிப் பணியிடங்களுக்கு நடைபெறவுள்ள தோ்வைக் கண்காணிக்கும் முதன்மை கண்காணிப்பாளா் பணி... மேலும் பார்க்க

நிபா வைரஸ்: 20 வழித்தடங்களில் மருத்துவக் கண்காணிப்பு அமைச்சா் மா. சுப்பிரமணியன்

கேரளத்தில் நிபா தொற்று பரவி வருவதால் தமிழகத்தின் 20 வழித்தடங்களில் மருத்துவக் கண்காணிப்பு தீவிரப்படுத்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். உலக மக்கள் தொகை தின நிகழ்... மேலும் பார்க்க

ரயில்வே கடவுப்பாதை ஆய்வு அறிக்கை: 2 வாரத்தில் சமா்ப்பிக்க உத்தரவு

ரயில்வே கடவுப் பாதைகளின் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதுடன், தற்போதைய நிலை அந்தப் பகுதிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் அமைத்தல், சுரங்கப்பாதை, மேம்பாலம் அமைத்தல் போன்றவை குறித்து 15 ... மேலும் பார்க்க

5 ரயில்களின் நேரம் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

தெற்கு ரயில்வேயில் முக்கிய 5 ரயில்கள் குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் நின்று, புறப்படும் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட ச... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: ஆட்சியா்களுடன் முதல்வா் ஆலோசனை

அரசின் சேவைகளை இல்லங்களுக்கே கொண்டு சோ்க்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தைத் தொடங்குவது குறித்து மாவட்ட ஆட்சியா்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசித்தாா். தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக... மேலும் பார்க்க

34 தலைமை ஆசிரியா்களுக்கு டிஇஓ பதவி உயா்வு

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் 34 தலைமை ஆசிரியா்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலா்களாக பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநா் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி ... மேலும் பார்க்க