இங்கிலாந்து மகளிருக்கு எதிராக முதல்முறை... டி20 தொடரை வென்ற இந்திய மகளிரணி உற்சாகம்!
இங்கிலாந்து மகளிருக்கு எதிரான டி20 தொடரினை முதல்முறையாக இந்திய மகளிரணி வென்ற சாதனை படைத்துள்ளது.
இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் இந்திய மகளிரணி 4-ஆவது டி20 போட்டியில் நேற்றிரவு விளையாடியது.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 126/7 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சோபியா 22 ரன்கள் அடுத்தார்.
இந்தியாவின் சார்பில் ராதா யாதவ், ஸ்ரீ சரணி தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.
அடுத்து விளையாடிய இந்திய மகளிரணி 17 ஓவர்களில் 127/4 ரன்கள் எடுத்து வென்றது. இதில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 32 ரன்கள் எடுத்தார்.
5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் 3-1 என வென்று தொடரை இந்திய மகளிரணி முதல்முறையாக வென்றுள்ளது.
கடைசி டி20 ஜூலை 12ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அடுத்ததாக ஒருநாள் போட்டிகள் ஜூலை 16-இல் தொடங்குகின்றன.

15 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்த ராதா யாதவ் ஆட்ட நாயகி விருது வென்றார்.
சொந்த மண்ணிலும் சரி இங்கிலாந்திலும் சரி இதற்கு முன்பாக இந்திய மகளிரணி இங்கிலாந்து மகளிருக்கு எதிராக விளையாடிய 6 டி20 தொடர்களில் தோல்வியுற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வரலாற்று வெற்றிக்கு இந்திய மகளிருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இந்திய மகளிரணியினர் விடியோவை பிசிசிஐ வுமன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
Delight in the air #TeamIndia's joyous moments after completing a 6 wicket win over England and sealing the #ENGvIND T20I series pic.twitter.com/KpKycyuB3H
— BCCI Women (@BCCIWomen) July 10, 2025