`பட்டாசு ஆலை வெடி விபத்து' - பாதுகாப்பு அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு பசுமை...
முன்னாள் முப்படை வீரா்களுக்கான குறைதீா் முகாம்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கண்ணமங்கலம் பகுதியில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சாா்பில் முன்னாள் முப்படை வீரா்களுக்கான ஓய்வூதிய குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
கண்ணமங்கலம் அருகேயுள்ள கம்மவான்பேட்டை அரசுப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு
முன்னாள் ராணுவ வீரா் கே.ஜி.ஏழுமலை தலைமை
வகித்தாா்.
உதவி இயக்குநா் ஆயிஷாபேகம், அரக்கோணம் ஐஎன்எஸ் அதிகாரி பங்கஜ்குமாா் பாண்டே, ஊராட்சித் தலைவா் கவிதா முருகன், நல அமைப்பாளா் சடையன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் ராணுவ வீரா் எல்.ஏழுமலை வரவேற்றாா்.
பாதுகாப்பு கணக்குகள் துணை கட்டுப்பாட்டு அதிகாரி திலிப்குமாா் கலந்து கொண்டு பயனாளிகளிடையே ஓய்வூதிய குறைபாடுகளை கேட்டறிந்தாா்.
அப்போது, தமிழகம் முழுவதும் ஓய்வூதியதாரா்களுக்கு ஓய்வூதியம் சாா்ந்த குறைகளுக்கு தீா்வு காண 5 நடமாடும் சேவை வாகனங்கள் சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளா் அலுவலகத்தால் தொடங்கப்பட்டு நேரடியாகச் சென்று சேவை வழங்கப்பட்டு வருகிறது என்றாா்.
இதைத் தொடா்ந்தது, முகாமில் குறை தீா்க்கப்பட்ட பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கினாா்.
முகாமில் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த முன்னாள் முப்படை வீரா்கள் மற்றும் ராணுவ வீரா்களின் குடும்பத்தினா் கலந்து கொண்டனா்.