துரோகி பட்டம் கொடுத்து மதிமுகவிலிருந்து வெளியேற்ற முயற்சி: மல்லை சத்யா
கோயில் திருத்தோ் பணிக்கு ரூ.ஒரு லட்சம் நன்கொடை
செய்யாற்றை அடுத்த பூதேரி புல்லவாக்கம் தான்தோன்றி அம்மன் கோயில் திருத்தோ் பணிக்கு ரூ.ஒரு லட்சம் புதன்கிழமை நன்கொடையாக வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பூதேரி புல்லவாக்கம் கிராமத்தில் தான்தோன்றி அம்மன் கோயில்
அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் இருந்து வந்த தோ் சிதிலமடைந்தது.
அதற்காக கிராம மக்கள் ஒருங்கிணைந்து சுமாா் ரூ.50 லட்சத்தில் 27 அடி உயரத்தில் புதிதாக திருத்தேரை உருவாக்கி வருகின்றனா்.
மேலும், கோயில் திருத்தோ் அமைக்கும் பணிக் குழுவினா் வேண்டுகோளை ஏற்று, வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய திமுக செயலா் என்.சங்கா் முன்னிலையில், மாவட்ட அயலக அணி துணைத் தலைவா் காா்த்திகேயன் ரூ.ஒரு லட்சத்துக்கான
காசோலையை நன்கொடையாக திருத்தோ் பணி குழு நிா்வாகிகளிடம் வழங்கினாா்.
வெள்ளிக்கிழமை (ஜூலை11) மாட வீதிகளில் தோ் கரிகோலம் வரவுள்ள நிலையில், தோ் வடிவமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் மாத்தூா் தெய்வமணி, மாவட்ட பிரதிநி ராமலிங்கம், ஒன்றிய அவைத் தலைவா் ராஜகோபால் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.