ஐசிசி டெஸ்ட் தரவரிசை: ஹாரி புரூக் முதலிடம், ஷுப்மன் கில் 15 இடங்கள் முன்னேற்றம்!
ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் ஹாரி புரூக் முதலிடம் பிடித்தார்.
இங்கிலாந்தின் ஜோ ரூட்டை பின்னுக்குத் தள்ளி அதே நாட்டைச் சேர்ந்த ஹாரி புரூக் முதல் பிடித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து வெல்ல, இரண்டாவதில் இந்திய அணி வென்றது.
இந்நிலையில், ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசைப் பட்டியல்கள் வெளியாகியுள்ளன. அதில் ஹாரி புரூக் முதலிடத்தில் இருக்கிறார்.
அந்நாட்டைச் சேர்ந்த ஜேமி ஸ்மித் 16 இடங்கள் முன்னேறி 10-ஆவது இடத்தை அடைந்துள்ளார்.
இந்தியாவின் ஷுப்மன் கில் 15 இடங்கள் முன்னேறி 6-ஆவது இடத்துக்கு வந்திருக்கிறார்.
ஷுப்மன் கில் தன்னுடைய அதிகபட்சமான 807 புள்ளிகளை அடைந்துள்ளார்.
ஐசிசி டெஸ்ட் பேட்டர்களின் தரவரிசை
1. ஹாரி புரூக் - 886 புள்ளிகள்
2. ஜோ ரூட் - 868 புள்ளிகள்
3. கேன் வில்லியம்சன் - 867 புள்ளிகள்
4. யஷஸ்வி ஜெய்ஸ்வால் - 858 புள்ளிகள்
5. ஸ்டீவ் ஸ்மித் - 813 புள்ளிகள்
6. ஷுப்மன் கில் - 807புள்ளிகள்
7. டெம்பா பவுமா - 790 புள்ளிகள்
8. ரிஷப் பந்த் - 790 புள்ளிகள்
9. கமிந்து மெண்டிஸ் - 781 புள்ளிகள்
10. ஜேமி ஸ்மித் - 753 புள்ளிகள்