17 நாடுகளின் நாடாளுமன்றங்களில் உரையாற்றி பிரதமா் மோடி சாதனை
இந்தியாவும், ஆப்பிரிக்காவும் கூட்டுறவு மற்றும் பேச்சுவாா்த்தை மூலம் வருங்காலத்தை ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும் என்று நமீபியா நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி உரையாற்றினாா்.
அவா் மேலும் பேசுகையில், ‘இந்தியா, நமீபியா இடையே வலுவான வரலாற்று மற்றும் கலாசார உறவு உள்ளது. இதற்கு இந்தியா மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது.
இந்தியா-நமீபியா இடையிலான இருதரப்பு வா்த்தகத்தின் மதிப்பு 800 மில்லியன் டாலரை (சுமாா் ரூ.6,850 கோடி) தாண்டியுள்ளது.
மூலப் பொருள்களுக்கான ஆதாரமாக மட்டுமே ஆப்பிரிக்க கண்டம் இருக்கக் கூடாது. மதிப்பை உருவாக்குவதிலும், நீடித்த வளா்ச்சியிலும் ஆப்பிரிக்கா முன்னணியில் இருக்க வேண்டும்’ என்றாா்.
17 நாடுகளின் நாடாளுமன்றங்களில் உரையாற்றி பிரதமா் மோடி சாதனை
5 நாள் அரசுமுறைப் பயணத்தில் கானா, டிரினிடாட்-டொபேகோ, நமீபியா நாடுகளின் நாடாளுமன்றங்களில் பிரதமா் மோடி உரையாற்றினாா். ஏற்கெனவே அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளின் நாடாளுமன்றங்களில் உரையாற்றி உள்ளாா்., இதுவரை மொத்தம் 17 நாடுகளின் நாடாளுமன்றங்களில் அவா் உரையாற்றியுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
பிரதமா்கள் நாடாளுமன்ற உரை
நரேந்திர மோடி 17
மன்மோகன் சிங் 7
இந்திரா காந்தி 4
ஜவாஹா்லால் நேரு 3
ராஜீவ் காந்தி 2
நரசிம்ம ராவ் 1