செய்திகள் :

நம்ம முடியாத விலையில் ஒன்பிளஸ் பேட் லைட்! இந்தியாவில் அறிமுகம்

post image

ஒன்பிளஸ் பேட் லைட் என்ற புதிய கையடக்கக் கணினியை இந்திய சந்தைக்கு ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இங்கிலந்து, ஐரோப்பா நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவில் ஒன்பிளஸ் பேட் லைட் அறிமுகமாகியுள்ளது. ஒன்பிளஸ் பேட் 3 வெளியான மூன்று மாதங்களில் மற்றொரு கையடக்கக் கணினியை ஒன்பிளஸ் அறிமுகம் செய்துள்ளது.

ஒன்பிளஸ் பேட் கோ, கையடக்கக் கணினியானது இந்தியாவில் கடந்த 2023ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து ஒன்பிளஸ் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட பேட் லைட் கையடக்கக் கணினியை அறிமுகம் செய்துள்ளது.

சிறப்புகள் என்னென்ன?

  • ஒன்பிளஸ் பேட் லைட் 11 அங்குல எச்.டி. மற்றும் எல்.இ.டி. திரை கொண்டது. திரையின் திறன் 1920×1200 அளவு உடையது.

  • பயன்படுத்துவதற்கு திரை சுமூகமாக இருக்கும் வகையில் 90Hz திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

  • ஒளிக்கற்றைகள் திரையில் விழுந்து எதிரொலிக்காத வண்ணம் திரை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், நீண்ட நேரம் சிரமமின்றி பயன்படுத்தலாம்.

  • மீடியாடெக் ஹெலியோ ஜி 100 என்ற சிப் பொருத்தப்பட்டுள்ளது. 6nm புராசஸர் உடையது.

  • 128GB நினைவகத்தையும் 6GB உள்நினைவகத்தையும் கொண்டது.

  • மற்ற கையடக்கக் கணினியில் 8000mAh திறனுடைய பேட்டரி வழங்கப்பட்டிருந்த நிலையில், டேப் லைட்டில் 9340mAh திறனுடைய பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

  • இத்தனை அம்சங்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும் இதன் விலை ரூ. 19,692 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • வைஃபை வேரியன்ட் உடைய கையடக்கக் கணினி விலை ரூ. 23,188 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க |மோட்டோரோலா ஜி 96 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்!

OnePlus Pad Lite Launched in india as a New Budget Tablet

எல்ஐசி-யின் புதிய காப்பீட்டு திட்டங்கள்

நவ் ஜீவன் ஸ்ரீ (திட்டம் 912), எல்ஐசியின் நவ் ஜீவன் ஸ்ரீ ஒற்றை பிரீமியம் (திட்டம் 911) ஆகிய இது காப்பீட்டு திட்டங்களை இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்ஐசி) அறிமுகப்படுத்தியுள்ளது.இது குறித்து நிறு... மேலும் பார்க்க

ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் உற்பத்தி 14% அதிகரிப்பு!

புதுதில்லி: ஜூன் மாத முடிய காலாண்டில் நிறுவனத்தின் ஸ்டீல் உற்பத்தி 14 சதவிகிதம் அதிகரித்து 7.26 மில்லியன் டன்னாக உள்ளதாக ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் தெரிவித்துள்ளது. இதுவே கடந்த வருடம் இதே காலகட்டத்தில் அதன... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் உயர்ந்து ரூ.85.67 ஆக முடிவு!

மும்பை: அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்த நம்பிக்கை மற்றும் பரஸ்பர வரிகள் விதிப்பதில் தாமதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இன்று (புதன்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 6 காசுகள் ... மேலும் பார்க்க

25,500 புள்ளிகளுக்குக் கீழே சென்ற நிஃப்டி; சென்செக்ஸ் 83,536 புள்ளிகளுடன் நிறைவு!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் முடிவடைந்தன. அமெரிக்க அதிபர் டிரம்ப் மேலும் ஏழு நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை அறிவிப்பதை முன்னிட்டு முதலீட்... மேலும் பார்க்க

மோட்டோரோலா ஜி 96 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்!

மோட்டோரோலா நிறுவனத்தில் புதிதாக ஜி 96 என்ற ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் குறித்து பயனர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில், தற்போது அதன் முழு விவரங்களும்... மேலும் பார்க்க

இணையவசதி இல்லாமல் இயங்கும் பிட்சாட் செயலி! சிறப்பம்சங்கள்...

இணையவசதி இல்லாமல் இயங்கும் ’பிட்சாட்’ என்ற செயலியை ட்விட்டர் (தற்போது எக்ஸ்) இணை நிறுவனர் ஜாக் டார்ஸி அறிமுகம் செய்துள்ளார்.வாட்ஸ்அப், டெலிகிராம், முகநூல் போன்ற மற்றவர்களுடன் தகவல் பரிமாறிக் கொள்ளும் ... மேலும் பார்க்க