மாணவா், சுற்றுலா, ஹெச்-1பி விசா கட்டணத்தை உயா்த்தியது அமெரிக்கா
ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் உற்பத்தி 14% அதிகரிப்பு!
புதுதில்லி: ஜூன் மாத முடிய காலாண்டில் நிறுவனத்தின் ஸ்டீல் உற்பத்தி 14 சதவிகிதம் அதிகரித்து 7.26 மில்லியன் டன்னாக உள்ளதாக ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் தெரிவித்துள்ளது. இதுவே கடந்த வருடம் இதே காலகட்டத்தில் அதன் உற்பத்தி 6.35 மில்லியன் டன்னாக இருந்தது.
இருப்பினும், காலாண்டுக்கு காலாண்டு அடிப்படையில், ஜனவரி முதல் மார்ச் வரையான காலாண்டில் 7.63 மில்லியன் டன்னாக இருந்த உற்பத்தியுடன் ஒப்பிடும் போது இது 5 சதவிகிதம் குறைவு.
திட்டமிடப்பட்ட பராமரிப்பு நிறுத்தங்களும் பிறகு, உலைகள் மீண்டும் தொடங்கி, உகந்த திறனுடன் இயங்கி வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் செயல்பாடு திறன் முதல் காலாண்டில் 87% உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவில், ஜே.எஸ்.டபிள்யூ ஏப்ரல் முதல் ஜூன் வரையான நிதியாண்டு 2026ல் 7.02 மில்லியன் டன் எஃகு உற்பத்தி செய்தது. இது ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலாண்டில் அது 6.12 மில்லியன் டன்களை விட 15 சதவிகிதம் அதிகமாகும்.
மார்ச் 31, 2025 உடன் முடிவடைந்த காலாண்டில் 7.40 மில்லியன் டன்களாக இருந்த உற்பத்தியை விட இது 5 சதவிகிதம் குறைவாகும்.
இதையும் படிக்க: பிரதமர் மோடிக்கு நமீபியாவின் உயரிய விருது - புகைப்படங்கள்