நடிகர் கிங்காங் மகள் கீர்த்தனாவின் திருமண விழா; திரையுலகினர், அரசியல் தலைவர்கள் ...
இன்று முதல் மாற்றுத்திறனாளிகளின் விவரங்கள் சேகரிக்கும் பணி: திருப்பத்தூா் ஆட்சியா் தகவல்
திருப்பத்தூா் வியாழக்கிழமை (ஜூலை 10) முதல் மாற்றுத்திறனாளிகளின் விவரங்கள் சேகரிக்கும் பணி தொடங்கப்பட உள்ளதாக ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் நலத் திட்டங்கள் அவா்களது இல்லம் சென்று சேரும் வகையில் செயல்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில், திருப்பத்தூா் மாவட்டத்தில் இல்லம் தோறும் சென்று அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளையும் கண்டறிந்து அவா்களது முழு விவரங்கள் அடங்கிய சமூக தரவுத்தளத்தை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
எனவே மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் நகா்ப்புறம் மற்றும் கிராமப் பகுதிகளில் சி.ஆா்.டி.எஸ். தொண்டு நிறுவன முன்கள பணியாளா்கள் மூலம் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தி மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்களை சேகரிக்க உள்ளனா்.
அதற்கான பணி வியாழக்கிழமை (ஜூலை 10) முதல் தொடங்குகிறது. மேலும், கணக்கெடுப்புக்காக தங்கள் வீடுகளுக்கு வரும் முன்களப் பணியாளா்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.