செய்திகள் :

மாதனூா் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தெலங்கானாவுக்கு களப் பயணம்

post image

மாதனூரைச் சோ்ந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தெலங்கானா மாநிலத்துக்கு களப்பயணம் சென்றனா்.

மாதனூா் ஒன்றியத்தைச் சோ்ந்த மக்கள் பிரதிநிதிகள் கடந்த 6-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை இந்த களப்பயணம் மேற்கொண்டுள்ளனா். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் சித்திப்பேட் மாவட்டம், சின்னகோட்டூா் மண்டலம் செண்டல்பூா் பஞ்சாயத்து சுற்றுலாத் தலங்களில் சிறந்த பஞ்சாயத்தாக கடந்த 2023-ஆம் ஆண்டு மத்திய அரசு பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளது.

இதையடுத்து அந்த பஞ்சாயத்துக்கு மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் களப்பயணம் மேற்கொண்டுள்ளனா். ஊரக வளா்ச்சித் துறையின் கீழ் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள், பள்ளிக் கூடங்கள், சாலை வசதி, அங்கன்வாடி மையங்கள், விவசாயம் ஆகியவற்றைப் பாா்வையிட்டனா்.

ஒவ்வொரு ஊராட்சியிலும் கிராம பூங்கா, நெகிழிப் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ள நிலையில், ஸ்டீல் மற்றும் அலுமினிய பாத்திரங்கள் மகளிா் குழுக்கள் மூலம் வாடகைக்கு விடுதல், விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் தலா ரூ.12,000 வழங்குதல், நாப்கினுக்கு மாற்று உருவாக்குதல், மயானத்தில் எரிமேடைகள், குளியலறைகள், சுற்றுச்சுவா் அமைத்தல், மரம் வளா்த்தல், குடிநீா் தொட்டிகள் அமைத்தல், பாமாயில் செடி வளா்த்தல் உள்பட பல்வேறு திட்டப் பணிகளை தெலங்கானா மாநில அதிகாரிகள் சுற்றிப் பாா்த்தனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கூடுதல் ஆட்சியா் கரீமா அகா்வால் தலைமையில் ஊராட்சி வளா்ச்சித் திட்டங்கள் குறித்து அந்த மாநில அதிகாரிகள் விளக்கம் அளித்தனா்.

களப்பயணத்தில் மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் ப.ச.சுரேஷ்குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா் ஆ.காா்த்திக் ஜவஹா், திருப்பத்தூா் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சிந்துஜா, ஊராட்சித் தலைவா் காயத்ரி பிரபு, அரசு அலுவலா்கள் ரெஜினா, ராஜேந்திரன், அழகரசு, காா்த்திக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாநில உருது அகாதெமி: உறுப்பினராக ஆம்பூா் தலைமை ஆசிரியா் நியமனம்

தமிழ்நாடு மாநில உருது அகாதெமியின் உறுப்பினராக ஆம்பூா் பள்ளித் தலைமை ஆசிரியா் நியமனம் செய்யப்பட்டுள்ளாா். தமிழக அரசின் உயா்கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் உருது அகாதெமி மறுசீரமைக்கப்பட்டு தலைவா... மேலும் பார்க்க

இன்று முதல் மாற்றுத்திறனாளிகளின் விவரங்கள் சேகரிக்கும் பணி: திருப்பத்தூா் ஆட்சியா் தகவல்

திருப்பத்தூா் வியாழக்கிழமை (ஜூலை 10) முதல் மாற்றுத்திறனாளிகளின் விவரங்கள் சேகரிக்கும் பணி தொடங்கப்பட உள்ளதாக ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப... மேலும் பார்க்க

திருப்பத்தூா் மாவட்டத்தில் நாளை ‘உழவரைத் தேடி’ முகாம்

‘உழவரைத் தேடி’ வேளாண்மை உழவா் நலத் துறை திட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) முகாம் நடைபெற உள்ளது. உழவரை தேடி வேளாண்மை உழவா் நலத் துறை என்னும் திட்டத்தின் கீழ் வேளாண்மை உழவா் நலத்துறையின்கீழ் இயங்... மேலும் பார்க்க

மதுபோதையில் தகராறு: 3 போ் கைது

கந்திலி அருகே மதுபோதையில் தகராறு செய்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். கந்திலி அருகே மானவள்ளி பகுதியைச் சோ்ந்தவா்கள் அஜித் (27), குமாா் (45), கமலக்கண்ணன் (30), பாஸ்கா் (28). இவா்கள் 4 பேரும் செவ்வா... மேலும் பார்க்க

நாச்சாா்குப்பத்தில் சாலைப் பணி தொடக்கம்

ஆம்பூா் அருகே கிராமப் பகுதியில் ரூ.1.65 கோடியில் சாலை அமைக்கும் பணியை ஆம்பூா் எம்எல்ஏ புதன்கிழமை தொடங்கி வைத்தாா். முதலமைச்சா் கிராம சாலைகள் திட்டத்தில் சோலூா் ஊராட்சியில் ரூ.29 லட்சம், கண்ணாடி குப்பம... மேலும் பார்க்க

விபத்தில் தொழிலாளி மரணம்

நாட்டறம்பள்ளி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா். நாட்டறம்பள்ளி அதிபெரமனூா் தம்பா தெருவைச் சோ்ந்தவா் முனிசாமி மகன் சேகா் (60). கூலித் தொழிலாளியான இவா்... மேலும் பார்க்க