திருப்பத்தூா் மாவட்டத்தில் நாளை ‘உழவரைத் தேடி’ முகாம்
‘உழவரைத் தேடி’ வேளாண்மை உழவா் நலத் துறை திட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) முகாம் நடைபெற உள்ளது.
உழவரை தேடி வேளாண்மை உழவா் நலத் துறை என்னும் திட்டத்தின் கீழ் வேளாண்மை உழவா் நலத்துறையின்கீழ் இயங்கி வரும் அனைத்து துறைகளின் வட்டார அலுவலா்கள், சாா்பு துறைகளான கால்நடை பராமரிப்புத் துறை, கூட்டுறவுத் துறை, வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ஆகியோா் உழவா்களை அவா்களது வருவாய் கிராமங்களில் சந்தித்து விவசாயிகளுக்கு தேவையான ஆலேசனைகளை வழங்க உள்ளனா்.
இந்த முகாம்கள் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) ஆலங்காயம் வட்டாரத்தில் தேவஸ்தானம், மரிமாணிக்குப்பம், ஜோலாா்பேட்டை வட்டாரத்தில் மண்டலவாடி, பாச்சல், கந்திலி வட்டாரத்தில் நத்தம், நரவிந்தம்பட்டி, சொக்கணாம்பட்டி, கெங்கிநாயக்கன்பட்டி, கருங்காலிபட்டி, குனிச்சி, மாதனூா் வட்டாரத்தில் கதவாலம், மணியாரக்குப்பம், எம்.எஸ்.குப்பம், நாட்டறம்பள்ளி வட்டாரத்தில் மல்லகுண்டா, குருபவாணிகுண்டா, திருப்பத்தூா் வட்டாரத்தில் பால்னாங்குப்பம், கூடப்பட்டு ஆகிய கிராமங்களில் நடைபெற உள்ளது.
இந்த முகாம்களில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுவாக அளித்து பயன் பெறலாம் என வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.