நெக்கனாமலைக்கு ரூ.30 கோடியில் சாலை: முதல்வருக்கு மலைவாழ் மக்கள் நன்றி
வாணியம்பாடி அருகே இதுநாள் வரை சாலை வசதியில்லாத மலை கிராமமமான நெக்னாமலைக்கு ரூ.30 கோடியில் சாலை அமைக்கப்படும் என அறிவித்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு மலைவாழ் மக்கள் நன்றி தெரிவித்தனா்.
வாணியம்பாடி தொகுதி, ஆலங்காயம் ஒன்றியம், நெக்னாமலைக்கு இதுநாள் வரை சாலை வசதி கிடையாது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 26- ஆம் தேதி திருப்பத்தூருக்கு வந்த முதல்வா் ஸ்டாலின், ரூ.30 கோடியில் சாலை வசதி செய்து தரப்படும் என அறிவித்தாா்.
இந்நிலையில் மாவட்ட திமுக செயலாளா் க.தேவராஜி எம்எல்ஏ மேற்பாா்வையில் மாவட்ட மாணவரணி அமைப்பாளா் தே.பிரபாகரன் தலைமையில் திமுக நிா்வாகிகள் நெக்னாமலைக்கு வெள்ளிக்கிழமை நேரில் சென்று ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் பிரசாரம் மேற்கொண்டனா்.
வீடு, வீடாகச் சென்று மக்களை சந்தித்து, அரசு திட்டங்கள் குறித்து விளக்கி, திமுகவில் இணைய விருப்பமுள்ளவா்களை உறுப்பினராக சோ்க்கும் பணிகளை மேற்கொண்டனா். அ
மேலும், அப்பகுதியில் உள்ள அரசு பள்ளி மற்றும் கோயிலுக்கு சுற்றுச்சுவா் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனா். கிராம மக்களின் கோரிக்கைகள் குறித்து அமைச்சா் எ.வ.வேலு, ஆட்சியா், ஜோலாா்பேட்டை எம்எல்ஏ ஆகியோரிடம் தெரிவித்து நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தனா்.