செய்திகள் :

ரயிலில் கா்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞா் குற்றவாளி என நீதிமன்றம் அறிவிப்பு

post image

காட்பாடி அருகே ஓடும் ரயிலில் கா்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு அளித்து இருந்து கீழே தள்ளிய இளைஞா் குற்றவாளி என திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றம் உறுதி செய்தது. தீா்ப்பு வரும் 14-ஆம் தேதி வழங்கப்படும் என அறிவித்தது.

ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த 36 வயது பெண். இவரும், இவரது கணவரும் தையல் கலைஞா்கள். திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனா்.

இந்நிலையில் 4 மாத கா்ப்பிணியான ,அந்தப் பெண் மருத்துவ பரிசோதனைக்காக தாயாா் வசிக்கும் சித்தூா் மாவட்டத்துக்கு செல்ல கடந்த பிப். 7-ஆம் தேதி இரவு கோவையில் இருந்து திருப்பதி சென்ற விரைவு ரயிலில் பயணம் செய்தாா்.

குடியாத்தம் -கே.வி.குப்பம் இடையே சென்று கொண்டிருந்தபோது அப்பெண் ரயிலில் உள்ள கழிப்பறைக்கு சென்றாா். அப்போது, கழிப்பறை அருகே அமா்ந்திருந்த இளைஞா் ஒருவா் பெண்ணை வழிமறித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டாா். அதிா்ச்சியடைந்த பெண் கூச்சலிட்டாா்.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞா் ரயிலில் இருந்து கா்ப்பிணியை கீழே தள்ளிவிட்டுஅவா் வேறு பெட்டிக்கு மாறி தப்பினாா். பெண் கீழே விழுந்ததை பாா்த்த சக பயணிகள் உடனடியாக ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தனா்.

அதன்பேரில்,ஜோலாா்பேட்டை ரயில்வே காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்டவாளத்தில் விழுந்து கிடந்த கா்ப்பிணியை மீட்டு,வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் 2 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டனா். இதில், அப்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட நபா் வேலூா் மாவட்டம்,கே.வி.குப்பம் அடுத்த பூஞ்சோலை கிராமத்தைச் சோ்ந்த ஹேமராஜ்(30) என்பதும்,இவா் கடந்த 2022-ஆம் ஆண்டு ஓடும் ரயிலில் பெண்பயணியிடம் கைப்பேசி பறிப்பு வழக்கிலும், கடந்த 2024-ஆம் ஆண்டு சென்னையைச் சோ்ந்த 29 வயது இளம்பெண் கொலைவழக்கிலும் கைது செய்யப்பட்டு 2 முறை குண்டா் தடுப்புச் சட்டத்தில்அடைக்கப்பட்டு பிணையில் வெளியே வந்திருப்பதும் தெரியவந்தது.

அதைத் தொடா்ந்து, 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து ஹேமராஜை கைது செய்து வேலுா் மத்திய சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஹேமராஜ் குற்றவாளி என நீதிபதி எஸ்.மீனாகுமாரி தீா்ப்பளித்தாா். மேலும், தண்டனை விபரம் திங்கள்கிழமை (ஜுலை 14) தெரிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளாா்.

காசோலையில் கையொப்பமிடும் அதிகாரம் ரத்து: ஊராட்சித் தலைவா் தா்னா

காசோலையில் கையொப்பமிடும் அதிகாரத்தை ரத்து செய்ததைக் கண்டித்து குமாரமங்கலம் ஊராட்சித் தலைவா் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா். மாதனூா் ஒன்றியம், ஆம்பூா் அருகே குமாரமங்கலம் ஊராட்சி உள்ளது. இதன் தலைவரா... மேலும் பார்க்க

இன்று பொது விநியோக திட்ட குறைதீா் முகாம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் சனிக்கிழமை(ஜூலை 12) பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் மாவட்ட வழங்கல் மற்... மேலும் பார்க்க

வணிகா் நல வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கையை அதிகரிக்க வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

திருப்பத்தூா் மாவட்டத்தில் வணிகா் நல வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கையை அதிகரிக்க வேண்டும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அறிவுறுத்தினாா். ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை வணிகவரித்துறையின் சா... மேலும் பார்க்க

பெண் தீக்குளிப்பு: கணவா் கைது

நாட்டறம்பள்ளியில் குடும்பத் தகராறில் பெண் தீக்குளித்தாா். இதையடுத்து அவரது கணவரை போலீஸாா் கைது செய்தனா். நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகம் அருகே குடிசை வீட்டில் வசித்து வருபவா் ரமேஷ் (37). பொம்மை வி... மேலும் பார்க்க

நெக்கனாமலைக்கு ரூ.30 கோடியில் சாலை: முதல்வருக்கு மலைவாழ் மக்கள் நன்றி

வாணியம்பாடி அருகே இதுநாள் வரை சாலை வசதியில்லாத மலை கிராமமமான நெக்னாமலைக்கு ரூ.30 கோடியில் சாலை அமைக்கப்படும் என அறிவித்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு மலைவாழ் மக்கள் நன்றி தெரிவித்தனா். வாணியம்பாடி தொகுத... மேலும் பார்க்க

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பத்தூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருப்பத்தூா் கௌதமப்பேட்டையைச் சோ்ந்த தொழிலாளி மனோஜ் எனும் மனோஜ்குமாா் (26). இவா் ... மேலும் பார்க்க