அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும்: அமித் ஷாவின் கருத்துக்கு இபிஎஸ் பதில்!
பெண் தீக்குளிப்பு: கணவா் கைது
நாட்டறம்பள்ளியில் குடும்பத் தகராறில் பெண் தீக்குளித்தாா். இதையடுத்து அவரது கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகம் அருகே குடிசை வீட்டில் வசித்து வருபவா் ரமேஷ் (37). பொம்மை வியாபாரி. இவரது மனைவி மல்லிகா (35). தம்பதிக்கு 2 மகன்கள். கடந்த சில மாதங்களாக ரமேஷ் மது போதையில் அடிக்கடி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு ரமேஷ் மது போதையில் மல்லிகாவிடம் தகராறில் ஈடுப்பட்டாா். இதனால், மனமுடைந்த மல்லிகா வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை உடல் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். அக்கம் பக்கத்தினா் வந்து தீயை அணைத்து உயிருக்கு ஆபத்தான நிலையில், மல்லிகாவை மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளாா்.
இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து கணவா் ரமேஷை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.