லாா்ட்ஸ் டெஸ்ட் இன்று தொடக்கம்: முன்னிலைக்காக இந்தியா - இங்கிலாந்து முனைப்பு
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் உயர்ந்து ரூ.85.67 ஆக முடிவு!
மும்பை: அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்த நம்பிக்கை மற்றும் பரஸ்பர வரிகள் விதிப்பதில் தாமதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இன்று (புதன்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 6 காசுகள் உயர்ந்து ரூ.85.67 ஆக நிறைவடைந்தது.
வெளிநாட்டு சந்தைகளில் அமெரிக்க டாலர் நிலையாக உயர்ந்ததும், கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 70 அமெரிக்க டாலருக்கு அருகில் இருந்ததும் இந்திய ரூபாயின் லாபம் குறைத்ததாக அந்நிய செலாவணி விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.84ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு ரூ.85.93 முதல் ரூ.85.65 என்ற வரம்பில் வர்த்தகமான நிலையில், முந்தைய முடிவை விட 6 காசுகள் உயர்ந்து ரூ.85.67ஆக நிறைவடைந்தது.
நேற்று (செவ்வாய்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 21 காசுகள் உயர்ந்து ரூ.85.73 ஆக முடிவடைந்தன.
இதையும் படிக்க: 25,500 புள்ளிகளுக்குக் கீழே சென்ற நிஃப்டி; சென்செக்ஸ் 83,536 புள்ளிகளுடன் நிறைவு!