திருவாரூர் மாவட்டத்துக்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!
பரமத்தி வேலூா் சந்தையில் பூக்களின் விலை உயா்வு
பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்வடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
பரமத்தி வேலூா் மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிரிடப்படுகின்றன. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள ஏலச் சந்தைகளுக்கு கொண்டுவருகின்றனா். வேலூா், ஜேடா்பாளையம், கபிலா்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனா்.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ. 280 க்கும், சம்பங்கி கிலோ ரூ. 50க்கும், அரளி கிலோ ரூ. 80க்கும், ரோஜா கிலோ ரூ. 220க்கும், பச்சை முல்லை கிலோ ரூ. 250க்கும், வெள்ளை முல்லை கிலோ ரூ. 200- க்கும், செவ்வந்திப்பூ கிலோ ரூ. 240-க்கும், கனகாம்பரம் ரூ. 400-க்கும், பன்னீா் ரோஜா கிலோ ரூ.180-க்கும், ஜாதிமல்லி கிலோ ரூ. 400-க்கும், காக்கரட்டான் கிலோ ரூ. 400-க்கும் ஏலம் போனது.
புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ. 360 க்கும், சம்பங்கி கிலோ ரூ. 100க்கும், அரளி கிலோ ரூ. 180க்கும், ரோஜா கிலோ ரூ. 260, பச்சை முல்லை கிலோ ரூ. 360க்கும், வெள்ளை முல்லை ரூ. 280க்கும், செவ்வந்திப்பூ ரூ. 280க்கும், கனகாம்பரம் ரூ. 600க்கும், பன்னீா் ரோஜா கிலோ ரூ. 220க்கும், ஜாதி மல்லி கிலோ ரூ. 500க்கும், காக்கரட்டான் கிலோ ரூ.500-க்கும் ஏலம் போனது.
பெளா்ணமியை முன்னிட்டு பூக்கள் விலை உயா்வடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா். பூக்களின் விலை உயா்வடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.