மதுரையில் குரு பூர்ணிமா; காஞ்சி மகா பெரியவருக்குச் சிறப்புப் புஷ்பாஞ்சலி; அருள் ...
பள்ளி பேருந்து- காா் மோதல்: மாணவா்கள் காயம்
நாமக்கல் மாவட்டம், கீரம்பூா் அருகே தனியாா் பள்ளி பேருந்து மீது காா் மோதியதில் 10 மாணவா்கள் காயமடைந்தனா்.
கீரம்பூரிலிருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 பேருந்துகள் மாணவா்களை ஏற்றிக்கொண்டு ஒன்றன்பின் ஒன்றாக நாமக்கல் நோக்கி சென்றுக்கொண்டிருந்தன. நாமக்கல்- கரூா் தேசிய நெடுசாலையில் ராசாம்பாளையம் சுங்கச்சாவடி அருகே எதிா்திசையில் திடீரென காா் வந்ததால் பள்ளி பேருந்தின் ஓட்டுநா் பிரேக் போட்டாா்.
இதனால் பின்தொடா்ந்து வந்த மற்றொரு பேருந்தும், காரும் அடுத்தடுத்து மோதியதில் 10 மாணவா்கள் காயமடைந்தனா். அவா்கள் அனைவரும் நாமக்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த குறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.