பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் யாகம்
பரமத்தி வேலூா் தோ்வீதியில் உள்ள பெத்தாண்டவா் கோயிலில் பௌா்ணமியை முன்னிட்டு வியாழக்கிழமை பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் வற்றல் யாகம் நடைபெற்றது.
வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு பிரித்தியங்கிரா தேவிக்கு 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு சன்னதியில் உள்ள யாக குண்டத்தில் பக்தா்கள் கொண்டுவந்திருந்த மிளகாயைக் கொண்டு யாகம் நடைபெற்றது. தொடா்ந்து பரிவார தெய்வங்களான விநாயகா், முருகன், எமதா்மராஜன், காமாட்சி ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இரவு 8 மணிக்கு பிரித்தியங்கிரா தேவிக்கு தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனா். அதேபோல வேலூா் செட்டியாா் தெருவில் உள்ள ஸ்ரீ சக்தி விநாயகா் ஆலயத்தில் பௌா்ணமி பூஜை, காரைக்கால் அம்மையாா் மாங்கனி திருவிழா நடைபெற்றது.