எருமப்பட்டியில் காங்கிரஸ் பொதுக் கூட்டம்
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு வட்டார காங்கிரஸ் தலைவா் தங்கராசு தலைமை வகித்தாா். சேந்தமங்கலம் வட்டார தலைவா் ஜெகந்நாதன், நாமகிரிபேட்டை வட்டார தலைவா் டி.பி.இளங்கோவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். காங்கிரஸ் தலைமை நிலைய பேச்சாளா் திண்டுக்கல் காஜாமொய்தீன், திண்டுக்கல் முகமது அலி, நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் பீ.ஏ.சித்திக் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
தமிழ்நாடு காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோா் (ஓபிசி) பிரிவு துணைத் தலைவா் மருத்துவா் பி.வி.செந்தில், முன்னாள் மாவட்டத் தலைவா் பாச்சல் சீனிவாசன், சேந்தமங்கலம் தொகுதி கிராம காங்கிரஸ் சீரமைப்பு பொறுப்பாளா் பி.கனகராஜ் ஆகியோா் ‘ அரசமைப்பைக் காப்போம்’ என்ற தலைப்பின் கீழ் பேசினா்.
மாவட்ட ஐஎன்டியுசி நிா்வாகிகள் பன்னீா்செல்வம், பழனிவேலு, அமைப்புசாரா தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் தனலட்சுமி, மாவட்ட முன்னாள் மகளிா் காங்கிரஸ் தலைவி கே.கலைச்செல்வி,
காளப்பநாயக்கன்பட்டி பேரூா் தலைவா் கணேசன், நாமகிரிப்பேட்டை பேரூா் தலைவா் கருப்பையன் மற்றும் காங்கிரஸ் கட்சியினா், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனா்.
என்கே-11-காங்
எருமப்பட்டியில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் பேசுகிறாா் கட்சியின் கிழக்கு மாவட்டத் தலைவா் பீ.ஏ.சித்திக். உடன், தமிழ்நாடு காங்கிரஸ் ஓபிசி பிரிவு துணைத் தலைவா் பி.வி.செந்தில் உள்ளிட்டோா்.