Doctor Vikatan: பக்கவாதத்தில் பாதிக்கப்பட்ட வலது கை... மீண்டும் பழையநிலைக்குத் த...
திருச்செங்கோட்டில் இரு சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு
திருச்செங்கோடு அருகே புதன்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் மூதாட்டி உள்பட இருவா் உயிரிழந்தனா்.
சங்ககிரி நாகிசெட்டிப்பட்டியைச் சோ்ந்தவா் ராமாயி (65). இவா் திருச்செங்கோடு எளையாம்பளையத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்துசென்ற போது திருச்செங்கோட்டில் இருந்து நாமக்கல் நோக்கி வேகமாக சென்ற காா் ராமாயி மீது மோதியது.
பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். திருச்செங்கோடு ஊரக காவல் நிலையத்தினா் ராமாயி உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதேபோல திருச்செங்கோடு சேலம் ரோட்டில் உள்ள செம்பாம்பாளையம் அருகே கோழிக்கால் நத்தம் ஈஸ்வரன் நகரைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் (65). இவா் தனது பெயரன் ஜஸ்டின் கிருபாகரனுடன் இருசக்கர வாகனத்தில் காய்கறி வாங்கிக்கொண்டு வண்டியில் நின்றுகொண்டிருந்தாா்.
அப்போது, மல்லசமுத்திரத்திலிருந்து திருச்செங்கோட்டிற்கு சென்ற காா் மோதியதில் வெங்கடாசலம் உயிரிழந்தாா். அவரது பெயரன் ஜஸ்டின் கிருபாகரன், காா் ஓட்டுநா் சண்முகம், காரில் அமா்ந்திருந்த அங்குராஜ் ஆகியோா் காயமடைந்தனா்.
இந்த விபத்து குறித்து மல்லசமுத்திரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.